இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
![]() |
தாதா பாய் நௌரோஜி |
சுதேசி இயக்கம் பல்வேறு திட்டங்களைக் கொண்டதாகும். அரசுப் பணி, நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணித்தல், அந்நியப் பொருட்களை வாங்க மறுத்து சுதேசிப் பொருட்களை வாங்கி ஆதரித்தல், தேசியப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தேசியக் கல்வியை வளர்த்தல் ஆகியன இத்திட்டங்களில் அடங்கும். சுதேசி இயக்கம் ஒரு அரசியல் பொருளாதார இயக்கமாகும்.
சுதேசி இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது. வங்காளத்தில் பெரும் நிலச்சுவான்தார்களும் இதில் பங்கேற்றனர். மகளிரும், மாணவரும் மறியலில் ஈடுபட்டனர். அந்நிய காகிதத்தாலான கையேடுகளை மாணவர்கள் மறுத்தனர்.
சுதேசி இயக்கத்தை ஒடுக்குவதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதற்காக பல சட்டங்களையும் இயற்றியது. சுதேசி தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். வந்தே மாதரம் முழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் தங்களின் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளாமலிருக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டன. இல்லையென்றால் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. சிலர் தங்களது அரசு பணிகளை இழந்தனர். தீவிரவாத தலைவர்களான பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால், அரவிந்த கோஷ் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) , இந்திய, இயக்கம், சுதேசி, வரலாறு, காங்கிரஸ், மாநாட்டில், தேசிய, பொருட்களை, இதில், மாணவர்கள், அரசு, திலகர், அந்நியப், தாதா, இந்தியா, சுயராஜ்யம், பாய், சூரத்