இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
![]() |
லாலா லஜபதிராய் |
பிமின் சந்திரபால் ஒரு மிதவாதியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தீவிரவாதியாக மாறியவர். சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்டு முக்கிய பங்காற்றினார். தனது அனல் பறக்கும் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் தேசியத்தை நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரப்பினார்.
மற்றொரு தீவிர தேசியவாதியான அரவிந்த கோஷ் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அதற்காக சிறைப்படுத்தப்பட்டார். விடுதலையான பிறகு பிரஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரியில் தங்கி ஆன்மீக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.
வங்கப்பிரிவினையும் தீவிரவாத எழுச்சியும்
![]() |
அரவிந்த கோஷ் |
- இந்திய தேசியத்தின் அடித்தளமாக விளங்கிய வங்காளத்தில் வளர்ந்துவரும் தேசியத்தின் வலிமையை முறியடித்தல்.
- வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைப்பது.
- தான் நினைத்ததை சாதித்து பிரிட்டிஷ் அரசின் வலிமையை வெளிப்படுத்துவது.
1905 அக்டோபர் 16 ஆம் நாள் வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது. அன்றே வங்காள மக்கள் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தி அன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்தனர். வங்காளத்தின் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இந்தியாவில் உண்மையான விழிப்புணர்வு வங்கப் பிரிவினைக்குப் பின்புதான் தோன்றியது என்று காந்தி எழுதினார். பிரிவினை எதிர்ப்பு போராட்டம் சுதேசி இயக்கமாக வலுப்பெற்று இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) , இந்திய, வரலாறு, சுதேசி, இயக்கத்தில், தேசிய, இயக்கம், உண்மையான, தேசியத்தின், வலிமையை, பிரிவினை, வங்கப், கோஷ், தனது, லாலா, இந்தியா, லஜபதிராய், பங்கு, இந்தியாவின், அரவிந்த