இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916)
தீவிரவாதிகளின் சாதனைகளாக பின்வருவனவற்றை தொகுத்துக் கூறலாம்.
1. சுயராஜ்யத்தை பிறப்புரிமையாக முதலில் கோரியவர்கள் தீவிரவாதிகளேயாவர்.
2. விடுதலை இயக்கத்தில் மக்களை பெருமளவில் ஈடுபடுத்தியது மற்றொரு சாதனையாகும். தேசிய இயக்கத்தின் சமூக அடிப்படை மேலும் விரிவாக்கப்பட்டது.
3. முதன்முதலில் அனைத்து இந்திய அரசியல் இயக்கத்தை (சுதேசி இயக்கம்) அமைத்து நடத்தியது போற்றத்தக்கதாகும்.
முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்படுதல் (1906)
1906 டிசம்பரில் இந்தியாவெங்கிலுமிருந்து முஸ்லீம்கள் முஸ்லிம் கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்கா நகரில் கூடியிருந்தனர். இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட டாக்காவைச் சேர்ந்த நவாப் சலி முல்லா என்பவர் முஸ்லீம்களின் நலன்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1906 டிசம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசைப் போலவே, அவர்களும் ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தி பிரிட்டிஷ் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர்.
தொடக்கத்தில் பிரிட்டிஷார் இதற்கு ஆதரவு காட்டினர். மின்டோ மார்லி சீர்திருத்தங்களின் போது முஸ்லிம்களுக்கென தனித்தொகுதியை கேட்டுப்பெற்றது அவர்களது முதலாவது சாதனையாகும்.
லக்னோ ஒப்பந்தம் (1916)
1916 ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டின்போது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரிந்த காங்கிரஸ் மீண்டும் ஒன்றிணைந்தது. 1916 ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. லக்னோ ஒப்பந்தம் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) , இந்திய, வரலாறு, தேசிய, இயக்கம், லக்னோ, ஒப்பந்தம், முஸ்லிம், முக்கிய, காங்கிரஸ், ஆண்டு, முஸ்லீம், இந்தியா, தீவிரவாதிகளின், சாதனையாகும், லீக்