டெல்லி சுல்தானியம்
முகமது பின் துக்ளக் ஆட்சியின் பிற்பகுதியில் உயர்குடியினரும் மாகாண ஆளுநர்களும் பல்வேறு இடங்களில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். மதுரையில் ஹசன் ஷா கிளர்ச்சி செய்து சுதந்திர மதுரை சுல்தானியத்தை நிறுவினார். 1336ல் விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. 1347ல் பாமினி அரசு நிறுவப்பட்டது. அயோத்தி முல்தான், சிந்து ஆகியவற்றின் ஆளுநர்களும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். குஜராத்தில் தகி மேற்கொண்டிருந்த கிளர்ச்சியை அடக்கச் சென்ற முகமது பின் துக்ளக் மூன்று ஆண்டுகள் அவனை விரட்டுவதில் செலவழித்தார். இதனால், நோய்வாய்ப்பட்ட அவர் 1351ல் இறந்தார். மக்களிடமிருந்து சுல்தானும் சுல்தானிடமிருந்து மக்களும் விடுதலை பெற்றதாக பதௌனி குறிப்பிட்டுள்ளார். பரானி என்ற எழுத்தாளர் அவரை முரண்களின் மொத்தக் கலவை என்று மதிப்பிட்டுள்ளார். டெல்லி சுல்தானியம் அவரது ஆட்சிக் காலத்திலிருந்து அழியத் தொடங்கியது.
பிரோஸ் துக்ளக் (1351 - 1388)
பிரோஸ் துக்ளக் |
படையெடுப்புகள்
டெல்லி சுல்தானியம் சிதறிவிடாமல் காப்பாற்றுவதே பிரோஸ் துக்ளக்கின் தலையாய கடமையாக இருந்தது. தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் சுல்தானியத்தை விரிவுபடுத்துவதைவிட, வடஇந்தியாவில் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே முயற்சித்தார். வங்காளத்திற்கெதிராக அவர் மேற்கொண்ட இரண்டு படையெடுப்புகளும் வெற்றியில் முடியவில்லை. டெல்லி சுல்தானியத்தின் பிடியிலிருந்து வங்காளம் நழுவியது. ஜஜ்நகர் (தற்கால ஒரிசா) மீது படையெடுத்துச் சென்ற பிரோஸ் ஷா பெரும் செல்வத்துடன் திரும்பினார். நாகர் கோட்மீது படைபெடுத்து அதன் ஆட்சியாளரை திறை செலுத்தும்படி செய்தார். அப்படையெடுப்பின்போது ஜாவலமுகி ஆலய நூலகத்திலிருந்த 1300 வடமொழிச் சுவடிகளைக் கொண்டு வந்தார். அவற்றை பாரசீக மொழியில் மொழி பெயர்க்கச் செய்தார். பின்னர், சிந்துப் பகுதியிலிருந்த தட்டா என்ற விடத்தில் நடைபெற்ற கிளர்ச்சியை ஒடுக்கினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , டெல்லி, வரலாறு, துக்ளக், பிரோஸ், சுல்தானியம், இந்திய, பின், முகமது, 1351ல், அவரது, செய்தார், அவர், சுல்தானியத்தின், கிளர்ச்சிகளில், ஆளுநர்களும், இந்தியா, ஈடுபட்டனர், சுல்தானியத்தை, கிளர்ச்சியை, சென்ற