டெல்லி சுல்தானியம்
பிரோஸ் துக்ளக்கின் ஆட்சியில் பல்வேறு ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சி நடத்துவதில் உலேமாக்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டார். உயர்குடியினரை ஆதரித்த அவர் அவர்கள் தங்களது சொத்துக்களை பரம்பரை வாரிசுகளுக்கு வழங்கவும் அனுமதித்தார். இக்தா முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது. வாரிசுகளுக்கும் அவை சென்றுசேர வழிவகுக்கப்பட்டது. இஸ்லாமியச் சட்டப்படி அவர் வரிகளை விதித்தார்.
முஸ்லிம் அல்லாதவர்கள்மீது ஜிஸியா வரி கட்டாயம் விதிக்கப்பட்டது. நீர்ப்பாசன வரி விதித்த முதல் சுல்தான் அவரே. அதேசமயம் நீர்ப்பாசனதுக்காக பல கால்வாய்களையும் கிணறுகளையும் அமைத்துக் கொடுத்தார். சட்லஜ் முதல் ஹான்சி வரை 200 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட கால்வாயே அவற்றில் மிக நீளமானதாகும். யமுனா முதல் ஹிஸ்ஸா வரை மற்றொரு கால்வாய் வெட்டப்பட்டது. டெல்லியும் அதைச் சுற்றியுமிருந்த சுமார் 1200 பழத்தோட்டங்களிலிருந்தும் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இஸ்லாமிய சட்டத்தில் இடம் இல்லை என்பதால் 28 பொருட்கள்மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரிகளையும் சுல்தான் ரத்து செய்தார். கர்கானாக்கள் என்றழைக்கப்பட்ட அரண்மனைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் அவர் ஏற்படுத்தினார். அவற்றில் ஆயிரக்கணக்கான அடிமைகள் வேலை செய்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட நகரங்கள் நிறுவப்பட்டன. டெல்லி செங்கோட்டைச்கு அருகே அமைக்கப்பட்ட பிரோசாபாத் நகரம் புகழ் மிக்கது. அது தற்காலத்தில் பிரோஸ் ஷா கோட்லா எனப்படுகிறது. ஜிம்மா மசூதி, குதுப்மினார் போன்ற பழைய சின்னங்களையும் அவர் செப்பனிட்டார்.
பிரோஸ் துக்ளக்கின் கல்லறை |
இந்தமட்டில் அவர் வருங்கால சிக்கந்தர் லோடி, அவுரங்கசீப் ஆகியோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தோற்கடிக்கப்பட்ட வீரர்களை அடிமைகளாக்கியதால், அவரது ஆட்சியின்போது அடிமைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பதாயிரத்தைத் தாண்டியது. 1388ல் பிரோஸ் இறந்தபோது, சுல்தானுக்கும் உயர்குடியினருக்குமிடையிலான பூசல்கள் மீண்டும் தலையெடுத்தன. பிரோஸ் துக்ளக் உருவாக்கிய அடிமைகளின் கிளர்ச்சியை அவருக்குப்பின் வந்த ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , வரலாறு, பிரோஸ், அவர், டெல்லி, இந்திய, துறை, சுல்தானியம், அவற்றில், அமைக்கப்பட்ட, அடிமைகளின், அவரது, துக்ளக், சுல்தான், துக்ளக்கின், இந்தியா, ஆட்சித், சீர்திருத்தங்கள், மீண்டும், ஜிஸியா