டெல்லி சுல்தானியம்
1329 - 38 ஆண்டுகளில் முகமது பின் துக்ளக் அடையாள நாணயத்தை அறிமுகப்படுத்தினார். பதினான்காம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அடையாள நாணயம் என்பது புதியதல்ல. ஏற்கனவே சீனாவில் குப்ளாய்கான் காகிதப் பணத்தை வெளியிட்டிருந்தார். அதே முறையில்தான், துக்ளக் வெள்ளி தாங்கா நாணயங்களுக்குப் பதில் செப்பு நாணயங்களை வெளியிட்டார். ஆனால், போலி நாணயங்களை தடைசெய்ய அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. பொற்கொல்லர்கள் பெருத்த அளவில் போலி நாணயங்களை உற்பத்தி செய்தன. இதனால் அங்காடிகளில் புதிய நாணயங்களை வாங்க மறுத்தனர். இறுதியாக, முகமது பின் துக்ளக் அடையாள
![]() |
முகமது பின் துக்ளக் செப்பு நாணயங்கள் |
தோ ஆப் பகுதியில் வரி விதிப்பு
சுல்தான் நடைமுறைப்படுத்திய இவ்விரண்டு திட்டங்களும் படுதோல்வியடைந்தன. அவரது கௌரவம் பாதிக்கப்பட்டதோடு நிதிச்சிக்கலும் ஏற்பட்டது. எனவே, முகமது பின் துக்ளக் தோ ஆப் பகுதி குடியானவர்களின் நிலவரியை உயர்த்தினார். (தோ ஆப் என்பது கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியாகும்). அப்போது கொடிய பஞ்சமும் அப்பகுதியில் தலை விரித்தாடியது. எனவே, வரிச் சுமையை தாங்கமாட்டாத குடியானவர்கள் நிலங்களை விட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள். ஆனால் முகமது பின் துக்ளக் அவர்களைக் கைப்பற்றி கடுமையாகத் தண்டித்தார். கலவரம் ஒடுக்கப்பட்டது.
வேளாண் சீர்திருத்தங்கள்
நிவாரண நடவடிக்கை வழங்குவதும், வேளாண்மையை முன்னேற்றுவதுமே பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியும் என்பதை சுல்தான் தாமதமாகவே உணர்ந்தார். குடியானவர்கள் விதைகள் வாங்கவும் வேளாண்மையைப் பெருக்கவும் தக்காவிக் கடன்கள் வழங்கும் திட்டத்தை சுல்தான் அறிவித்தார். திவானி கோஹி என்ற வேளாண்துறை ஒன்றையும் அவர் ஏற்படுத்தினார். எழுபது லட்ச ரூபாய் அரசு செலவில் 64 சதுர மைல் பரப்பில் மாதிரிப் பண்ணை ஒன்றையும் அவர் உருவாக்கினார். இத்திட்டம் பிரோஸ் துக்ளக் காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , துக்ளக், வரலாறு, நாணயங்களை, பின், முகமது, அடையாள, இந்திய, செப்பு, டெல்லி, சுல்தான், சுல்தானியம், அவர், நாணயங்கள், இதனால், ஒன்றையும், குடியானவர்கள், அறிவித்தார், என்பது, ஏற்பட்டது, இந்தியா, நாணயம், வெள்ளி, போலி, நடவடிக்கை