டெல்லி சுல்தானியம்
கியாசுதீன் துக்ளக் இவ்வம்சத்தை நிறுவியவர். அவர் தனது மகன் ஜினாகான் என்பவரை வாரங்கல்லுக்கெதிராக படையுடன் அனுப்பி வைத்தார். பிரதாபருத்ரனை முறியடித்து பெரும் பொருளுடன் ஜினாகான் நாடு திரும்பியவுடன் தனது தந்தையை சதி செய்து கொன்றுவிட்டு 1325 ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் அரியணையேறினார். கியாசுதீன் தனது ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு அருகில் துக்ளகாபாத் நகருக்கு அடிகோலினார்.
முகமது பின் துக்ளக் (1325 - 1351)
முகமது பின் துக்ளக் |
தலைநகர் மாற்றம்
முகமது பின் துக்ளக் தேவகிரியை தனது இரண்டாவது தலைநகராக்க விரும்பினார். தென்னிந்தியாமீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம். 1327 ஆம் ஆண்டு அதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அரசவை உலேமாக்கள், சூஃபித்துறவிகள் டெல்லியிலிருந்து இடம் பெயர்வதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தேவகிரிக்கு தௌலதாபாத் என்றும் பெயரிடப்பட்டது. புதிய தலைநகருக்கு செல்ல மறுத்தவர்கள்மீது சுல்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். இதனால், டெல்லி மக்கள் பெரும் துன்பங்களுக்காளாயினர். இவ்விரு இடங்களுக்கும் இடைப்பட்ட நூரம் 1500 கிலோ மீட்டர்களாகும். கோடைக் காலத்தில் மேற்கொண்ட கடுமையான பயணம் பலரை பலி கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சுல்தான் தௌலாதாபாத்தைக் கைவிட்டு, மீண்டும் அனைவரையும் டெல்லிக்கு திரும்புமாறு பணித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , துக்ளக், வரலாறு, முகமது, பின், இந்திய, டெல்லி, தனது, அவரது, அவர், பெரும், சுல்தான், சுல்தானியம், கடுமையான, டெல்லிக்கு, ஜினாகான், இந்தியா, கியாசுதீன், ஆண்டு, காலத்தில்