டெல்லி சுல்தானியம்
சையதுகள் (1414 - 1451)
தைமூர் இந்தியாவை விட்டுச் செல்லுமுன்பு கிசிர்கான் என்பவரை முல்தானின் ஆளுநராக நியமித்திருந்தார். 1414ல் கிசிர்கான் டெல்லியைக் கைப்பற்றி சையது மரபைத் தோற்றுவித்தார். டெல்லி சுல்தானியத்தை மீண்டும் நிலைப்படுத்த அவர் முயன்றார். ஆனால் முடியவில்லை. 1421ல் அவர் மறைந்தபின் அவரது புதல்வன் முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த முகமது ஷா தமக்கெதிரான சதிகளை முறியடிப்பதிலேயே காலம் கழித்தார். அமைச்சர் பஹ்லுல் லோடி ஆட்சியைப் பிடித்தார்.
லோடிகள் (1451 - 1526)
சையதுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த லோடிகள் ஆப்கானியர்கள். டெல்லியின் முதல் ஆப்கானிய ஆட்சியாளர் பஹ்லுல் லோடி. அவருக்கு முன்பு ஆட்சி செய்த அனைவரும் துருக்கியர்கள். 1489ல் அவர் மறைந்த பின் அவரது மகன் சிக்கந்தர் லோடி ஆட்சிக்கு வந்தார்.
![]() |
இப்ராஹிம் லோடி |
சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மூத்த மகன் இப்ராஹிம் லோடி ஆணவமிக்கவர். அரசவையிலேயே உயர்குடியினரை அவர் அவமதித்தார். கலகம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். அவரது சிற்றப்பா அலாவுதீன் கலகத்தில் ஈடுபட்டார். பஞ்சாபின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியும் இப்ராஹிம் லோடியால் அவமதிக்கப்பட்டார். மனம் வெறுத்த தௌலத்கான் லோடி இந்தியாமீது படையெடுத்து வரும்படி பாபருக்கு அழைப்பு விடுத்தார். டெல்லிக்கு எதிராக படையெடுத்து வந்த பாபர் 1526 ஆம் ஆண்டு பானிப்பட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முறியடித்துக் கொன்றார். ஆப்கானியர்களின் அரசு எழுபத்தி ஐந்து ஆண்டுகளே நீடித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , லோடி, அவர், ஆட்சிக்கு, வரலாறு, டெல்லி, இப்ராஹிம், சிக்கந்தர், அவரது, சுல்தானியம், இந்திய, வந்த, தைமூர், லோடிகள், படையெடுத்து, மகன், தௌலத்கான், தமது, பீகார், ஆளுநராக, தைமூரின், ஆண்டு, இந்தியா, படையெடுப்பு, இந்தியாவை, அடுத்து, வந்தார், கிசிர்கான், பஹ்லுல்