ஐரோப்பியர் வருகை
ஐரோப்பாவில் ஏழாண்டுப்போர் (1756 - 1763) வெடித்தபோது மூன்றாம் கர்நாடகப் போர் (1758 - 1763) தொடங்கியது.
பிரஞ்சுப்படைகளின் தலைவராக கவுண்ட்டிலாலி என்பவர் இருந்தார். 1760 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி சர் அயர் கூட் அவரை வந்தவாசியில் முறியடித்தார். அடுத்த ஆண்டில் ஆங்கிலேயப் படைகள் பாண்டிச்சேரியைக் கைப்பற்றி அந்நகரை அழித்தன. 1763ஆம் ஆண்டு பாரிஸ் உடன் படிக்கைப்படி ஏழாண்டுப்போர் முடிவுக்கு வந்தது. மூன்றாம் கர்நாடகப்போரும் முடிந்தது. பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பகுதிகளில் மட்டும் பிரஞ்சுக்காரர்கள் தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.
ஆங்கிலேய - பிரஞ்சு ஆதிக்கப் போட்டியில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். பிரஞ்சுக்காரர்கள் தோல்வியடைந்தனர்.
பிரஞ்சுக்காரர்களின் தோல்விக்கான காரணங்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1. ஆங்கிலேயரின் வாணிக மற்றும் கடற்படை வலிமை.
2. பிரஞ்சு அரசின் உதவிகிடைக்காமை.
3. பிரஞ்சுக்காரர்கள் தக்காணத்தின் ஆதரவை நம்பியிருந்தனர். ஆனால், ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் வலுவான அடித்தளம் இருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பியர் வருகை , வரலாறு, இந்திய, ஆண்டு, ஐரோப்பியர், பிரஞ்சு, பிரஞ்சுக்காரர்கள், வருகை, ஏழாண்டுப்போர், மூன்றாம், வந்தது, பாண்டிச்சேரி, இந்தியா, கர்நாடகப், போர், முடிவுக்கு