ஐரோப்பியர் வருகை
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு, நிசாம் உல் முல்க் தலைமையில் தக்காணம் தனது விடுதலையை அறிவித்துக் கொண்டது. கர்நாடகமும் தக்காணத்தின் ஒருபகுதியாகும். கர்நாடக ஆட்சியாளர் நிசாமின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார். 1740ல் ஐரோப்பாவில் ஆஸ்திரிய வாரிசுரிமை போர் தொடங்கியது. அப்போரில் இங்கிலாந்தும் பிரான்சும் எதிரெதிர் அணியில் இருந்தன. எனவே இந்தியாவிலும் இருவருக்கிடையே போர் மூண்டது. 1746ஆம் ஆண்டு
![]() |
டியூப்ளே |
ஆனால் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் எதிரெதிர் நிலைகளை எடுத்து வந்தனர்.
அதனால் இரண்டாம் கர்நாடகப்போர் (1749 - 1754) தோன்றியது. ஹைதராபாத்தில் நிசாம் பதவிக்கு வரவிரும்பிய முஸபர் ஜங் என்பவரை டியூப்ளே ஆதரித்தார். ஆற்காடு அரியணையைக்கைப்பற்ற விரும்பிய சந்தா சாகிப்புடன் டியூப்ளே ஏற்கனவே நட்பு கொண்டிருந்தார். இம்மூவரின் படைகள் முதலாம் கர்நாடகப்போரில் ஆங்கிலேயருக்கு பக்க பலமாக நின்ற அன்வாருதீனின் படைகளை முறியடித்தன.
1749ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்பூர் போரில் அன்வாரூதீன் கொல்லப்பட்டார். அந்த வெற்றியின் விளைவாக முஸபர் ஐங் நிசாம் பதவியை ஏற்றார். சந்தா சாகிப் ஆற்காடு நவாப் பதவியில் அமர்ந்தார். அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிக்கு தப்பியோடினார். அவருக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் சில துருப்புக்களை அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் பிரிட்டிஷ் படைத்தளபதியான ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைக் கைப்பற்றினார். காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் பிரஞ்சுப்படைகளை முறியடித்தார். சந்தா சாகிப் கைப்பற்றப்பட்டு தஞ்சாவூரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பியர் வருகை , வரலாறு, இந்திய, டியூப்ளே, வருகை, ஐரோப்பியர், போர், சந்தா, நிசாம், ஆண்டு, வந்தது, அதனால், முஸபர், சாகிப், அன்வாருதீனின், ஆற்காடு, முடிவுக்கு, முதலாம், ஆங்கிலேயர்கள், கர்நாடக, இந்தியா, இந்தியாவின், கொண்டிருந்தார், ஆஸ்திரிய, போரில், நடைபெற்ற, எதிரெதிர், இதற்கிடையில்