டல்ஹவுசி பிரபு
[உலகின் முதல் ரயில்பாதை 1825 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.]
தந்தி
அதேபோல், தந்தியின் பயன்பாட்டினால் தகவல் தொடர்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவில் டல்ஹவுசி இதற்காக மேற்கொண்ட பணிகள் சிறப்பானவையாகும். 1852 ஆம் ஆண்டு ஓ ஷாகன்னசே என்பவர் தந்தித் துறையின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். நாட்டின் முக்கிய நகரங்களான கல்கத்தா, பெஷாவர், பம்பாய், சென்னை போன்றவை தந்தி மூலம் இணைக்கப்பட்டன. டல்ஹவுசி தாயகம் திரும்புமுன் சுமார் 4000 மைல்கள் நீளத்திற்கு தந்திக்கம்பிகள் நிறுவப்பட்டன. 1857 ஆம் ஆண்டு கலகத்தின்போது தந்திமுறை ஆங்கிலேயருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. அதன் ராணுவ மதிப்பு அப்போதுதான் பெரிதும் உணரப்பட்டது.
அஞ்சல் துறை
தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசி பிரபு ஆவார். 1854ல் ஒரு புதிய அஞ்சலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தூரத்தைக் கணக்கில் எடுக்காமல் இந்தியா முழுவதும் செல்லக்கூடிய ஒரே மாதிரியாக அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலைகளும் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , ரயில்பாதை, வரலாறு, டல்ஹவுசி, அஞ்சல், இந்திய, பிரபு, இந்தியா, ஆண்டு, தந்தி, பெரும், முக்கிய, அவர், இந்தியாவின், 1853ல், தொடங்கப்பட்டது, ஆண்டிலும், சென்னை