டல்ஹவுசி பிரபு
டல்ஹவுசி மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்கள்
டல்ஹவுசி கைப்பற்றிய நிலப்பகுதிகளால் இந்தியாவின் வரைபடமே மாற்றம் பெற்றது எனலாம். அவர் ஒரு படையெடுப்பாளர் மட்டுமல்ல சிறந்த ஆட்சியாளரும்கூட. வங்காளத்துக்கென தனியாக துணை ஆளுநர் நியமிக்கப்பட்டதால், டல்ஹவுசி தனது முழு கவனத்தை நிர்வாகத்தில் செலுத்த முடிந்தது.
புதிய மாகாணங்களை செம்மைப்படுத்தி ஒரு நவீன அரசாக அவற்றை மாற்றியது அவரது மிகப்பெரும் சாதனையாகும். புதிதாக வெல்லப்பட்ட பகுதிகளை மத்திய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் "சீரமைக்கப்படாத அமைப்பு" (Non-Regulation System) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி புதிதாக வெல்லப்பட்ட பகுதி ஒவ்வொன்றிலும் ஒரு ஆணையர் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையர்களை தமது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வங்காள தரைப்படையின் தலைமையகத்தை கல்கத்தாவிலிருந்து மீரட்டுக்கு மாற்றினார். சிம்லா பிரிட்டிஷ் ராணுவத்தின் நிரந்தர தலைமையிடமாக இருந்தது.
ரயில் பாதைகள் அறிமுகம்
இந்தியாவில் ரயில் பாதைகள் அறிமுகத்தால் பொருளா தாரத்தில் ஒரு புதிய சகாப்தமே தோன்றியது. பிரிட்டிஷார் அதிக அக்கரையுடன் செயல்பட்டு விரைவாக ரயில் பாதைகளை அமைக்க முற்பட்டதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம். முதலாவது வாணிப வசதி, இரண்டாவது நிர்வாக வசதி, மூன்றாவது பாதுகாப்பு வசதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , டல்ஹவுசி, வரலாறு, இந்திய, அயோத்தி, பிரபு, வசதி, ரயில், வெல்லப்பட்ட, பாதைகள், புதிதாக, பிரிட்டிஷ், இந்தியா, மேற்கொண்ட, இணைப்பு, இந்தியாவின், சிப்பாய்