வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 95
“நல்ல காரியம் செய்தீர்கள்.”
“ஆனால், நம்மிலும் எத்தனையோ பேர் ஆரிய சமூகத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முளைத்து விட்டார்கள். இவர்கள் அசுரர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் புகழ்வதில் ஓய்வடைவதில்லை. அசுரர்களிடத்தில் நான் கூறி வந்ததைப் போன்ற எத்தனையோ புகழத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. ஆரியர்களாகிய நாம் அவற்றைக் கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அவர்களுடைய ஆயுதங்களைப் பார்த்த நாம் அவைகளைப் போல் செய்ய ஆரம்பித்தோம். அவர்களுடைய ரிஷப ரதங்களைப் பார்க்கிலும் குதிரை பூட்டிய ரதங்கள் வில் யுத்தத்தில் மிகவும் உறுதியாயிருக்கின்றன. எதிரிகளினுடைய பாணங்களிலிருந்து தப்புவதற்கு அந்த ரதங்கள் மீது மூடியும் போட்டுக்
கொள்ளலாம். அவர்களுடைய கவசம், கதாயுதம், பாணங்கள் இவைகளைப் பார்த்து நாம் அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நகர அமைப்பு, வீடுகள் கட்டும் முறை இந்தக் கலைகளிலிருந்து நாம் அனேக விஷயங்களைக் கிரகித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய சமுத்திர யாத்திரையையும் நாம் பழகித் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். தாமிரம் முதலிய உலோகப் பொருள்களும் ரத்தின வகைகளும், சமுத்திரத்திற்கு அப்பாலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. இப்பொழுதுங் கூட இந்த வியாபாரங்களெல்லாம் அசுர வியாபாரிகளுடைய ஆதிக்கத்திலேயேதானிருக்கின்றன: ஆனால் அசுரர்களுடைய லிங்க பூஜை. மனிதர்களை வாங்கி விற்கும் அடிமை வியாபாரம், இவை போன்ற பழக்க வழக்கங்கள் வெறுக்கத்தக்கவை என்று ஒதுக்கித் தள்ள வேண்டும்.”
“லிங்க பூஜையை ஆரியரில் எவனும் விரும்பமாட்டான்.”
“நண்ப! அவ்விதம் நினையாதே, நம்மிலும் அநேகர் அசுரர்களைப் போல், நம்மிடையிலும் ஒரு புரோகிதக் கூட்டத்தைச் சிருஷ்டிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆரியர்களில் போர் வீரர், புரோகிதர், வியாபாரி, விவசாயி, சிற்பி என்ற பிரிவுகள் கிடையாது. ஆரியர்கள் எல்லோரும் எல்லா வேலையையும் தங்கள் விருப்பப்படியே செய்கிறார்கள். ஆனால், அசுரர்களுடைய ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி ஜாதியார் இருக்கிறார்கள். இன்று ஆரியர்களாகிய நாம், நமக்குள்ளும் புரோகிதர்களைச் சிருஷ்டித்து விட்டால், சில வருஷங்களிலேயே நாமும் லிங்கத்தைப் பூஜிக்க
ஆரம்பித்துவிடுவோம். அசுர புரோகிதர்கள் கொள்ளைக்காரர் களாயிருக்கிறார்கள்; லாபத்தில் நோக்கமுடையவர்களாயிருக்கிறார்கள். நம்முடைய புரோகிதர்களும் அவர்களைப் போலவே ஆகிவிடுவார்கள் என்பதில் சந்தேகம் உண்டா?”
“இது பெரிய கெடுதியாகவன்றோ முடியும்?”
“கடந்த இருநூறு வருஷங்களாக ஏற்பட்டு வரும் ஆரிய-அசுரக் கூட்டுறவால் அசுரர்களுடைய எத்தனையோ கெட்ட பழக்கங்கள் ஆரியர்களிடத்திலும் புகுந்து விட்டதைப் பார்த்து, நம் பெரியோர்களிற் பலருக்கு அவநம்பிக்கை உண்டாகி விட்டது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 95, நாம், அவர்களுடைய, புத்தகங்கள், அசுரர்களுடைய, எத்தனையோ, வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, போல், ரதங்கள், தெரிந்து, அசுர, கொண்டிருக்கிறோம், பார்த்து, ஒவ்வொரு, பெரிய, சிறந்த, நம்மிலும், ஆரிய, ஆரியர்களாகிய, வேண்டும்