வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 87
இந்தச் சாமான்களும், இவர்களுடைய சவாரிக் குதிரைகளுமே இவர்களிடமிருப்பன. ஆகவே இவர்களுக்குச் சாமான்களின் கனத்தைப் பற்றிய சிந்தனையே இல்லை. ஆரியப் பெண்களிடம் நாளடைவில் ஆபரண அலங்காரத்தில் மோகம் குடிகொண்டு விட்டாலும், அவர்கள் இளமையில் சங்கீதம், நாட்டியத்தோடு கூடி, ஆயுதப் பயிற்சியும் பெற்றிருந்தார்களாகையால் ஆபத்துக் காலத்தில் அவர்கள் வாளேந்தவும் தயாராயிருந்தார்கள்.
அசுரப் படைகள் மலைக்கணவாயின் எல்லையில் இவர்களைத் தடுத்து நிறுத்தவும், அதே நேரத்தில் பின்னேயிருந்து ஒரு பெரும்படை இவர்களை வளைத்துக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார்களென்பது புருதானனுக்குத் தெரிய வந்தது. ஆகவே, அதைச் சமாளிப்பதற்கேற்ப ஆரியர்களும் தங்களுடைய திட்டங்களை வகுத்துக் கொண்டனர். எதிரிகளுக்குத் தங்கள் திட்டமும் தெரிந்து விடாமலிருக்கும் பொருட்டு ஒவ்வொரு கூட்டமும் ஒரு நாள் முன்பின்னாகக் கிளம்பியது. ஆனால் மலைக்கணவாயை நெருங்கும் போது எல்லோரும் ஒன்று சேர்ந்து விட வேண்டுமென்று அவர்கள் திட்டம். திட்டப்படி மலைக் கணவாய்க்கு ஒரு கோச தூரத்திற்கு முன்னால் எல்லோரும் ஒன்று கூடினர். முதலில் இருபத்தைந்து குதிரை வீரர்களைக் கணவாய்க்குள் போகும்படி செய்தனர். அவர்கள் கணவாய்க்குள் நுழைந்ததும் அங்கு மறைந்திருந்த அசுரர்களின் அம்பு அவர்களைத் தாக்கிற்று. இதனால், எதிரிகளின் திட்டம் உண்மை என்பதைத் தெரிந்து கொண்ட ஆரியர்கள், திரும்பி வந்து தங்கள் தலைவன் புருதானனிடம் தகவலைத் தெரிவித்தனர். புருதானன்,
முன்னேறுவதை விடத் தங்களுக்குப் பின்னால் உள்ள படையைத் தாக்கி அழிப்பது நல்லது என்று நினைத்தான். இதில் அவர்களுக்கு ஒரு சௌகர்யமும் இருந்தது. ஏனெனில், ஆரியர்களிடமிருந்து வருஷந்தோறும் ஆயிரக்கணக்கான குதிரைகளை அசுரர்கள் வாங்கி இருந்தாலுங்கூட, குதிரையை யுத்தகளத்தில் உபயோகிக்க அவர்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
தற்காப்பிற்கு வேண்டிய சில ஆட்களை மட்டும் அந்த இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றவர்களோடு புருதானன் பின்னே திரும்பினான். திடீரென்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 87, புத்தகங்கள், புருதானன், அந்த, வியாபாரி, பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, தெரிந்து, தங்கள், ஒன்று, திட்டம், கணவாய்க்குள், ஆகவே, எல்லோரும், புருதானனிடம், விட்டான், சிறந்த, வீட்டுப், இரண்டு, இவர்கள், ஆரியர்கள், முதலிய