வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 88
வேரூன்றியிருந்ததால், கண்ட கண்ட அசுரர்களை எல்லாம் இரக்கமின்றி வெட்டிக் குவித்தார்கள். நகராதிபனை நகரச் சந்தியில் நிறுத்தி, நகரப் பிரஜைகளுக்கு முன்னால் அங்கம் அங்கமாக வதை செய்தார்கள். ஆனால் குழந்தைகள், பெண்கள், வியாபாரிகள் முதலியவர்களைக் கொலை செய்யாது விடுத்தனர். அக்காலத்தில் அடிமைப்படுத்தும் வழக்கம் இருந்திருந்தால், அசுரர்களை இவ்வளவு அதிக அளவில் கொன்று குவித்திருக்கமாட்டார்கள். புஷ்கலாவதி நகரத்தின் பெரும்பாகத்தைத் தீக்கு இரையாக்கினர். இதுவே அசுரர்களுடைய கோட்டையின் முதலாவது அழிவு.
புருதானன் தன் ஆட்களுடன் திரும்பி, பாதுகாப்பிற்கு நிறுத்தப் பட்டிருந்தவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு தங்கள் தேசத்தை நோக்கிச் சென்றான்.
அன்றுதான், ஆரியர்களுக்கும் அசுரர்களுக்கும் (தேவர் -அசுரர்) இடையில் யுத்த விதையும் ஊன்றப்பட்டது.
பல வருஷங்கள் வரை புஷ்கலாவதி நகரின் வியாபாரம் சீரழிந்து போயிற்று. ஆரியர்கள் அசுரர்களோடு வியாபாரம் செய்ய மறுத்தனர். ஆனால், தாமிரத்தையும், பித்தளையையும் இவர்கள் எவ்வளவு காலத்திற்குப் பகிஷ்கரிக்க முடியும்?
____________________________________________________
*இன்றைக்கு நூற்று அறுபது தலைமுறைகளுக்கு முன்னே ஆரியர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம்-தேவாசுர யுத்தம் மூண்டதின் கதை. மலை வாசிகளான ஆரியர்களிடம் இன்னும் அடிமை வழக்கம் புகவில்லை.
தாமிரம், செம்பு ஆயுதங்களின் உபயோகம் மிக அதிகரித்துவிட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 88, புத்தகங்கள், ஆரியர்கள், கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், புஷ்கலாவதி, அசுரர்களை, கண்ட, வழக்கம், அசுரர்களுக்கும், யுத்தம், வியாபாரம், ஆரியர்களுக்கும், செய்ய, எதிர்பார்க்கவில்லை, சிறந்த, மீது, எவ்வளவு, அசுரப், அசுரர்கள், புருதானன்