வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 86
பல வருஷங்களாக அடிக்கடி அசுரர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால், புருதானன் அசுர சமூகத்தில் உள்ள சில பலவீனங்களையும் தெரிந்துகொண்டான். அதாவது, அசுர குலத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எவ்வளவுதான் சாமர்த்தியசாலிகளாயிருந்தாலுங்கூட, அவர்களில் கோழைகள் அதிகம். தங்களிடமுள்ள படைகள், அடிமைகள் இவர்களுடைய பலத்தில் நம்பிக்கை வைத்தே எதிரிகளுடன் போராட விரும்புகிறார்கள். சத்துரு பலவீனனாயிருந்தால் இந்தக் கூலிப்படை வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் எதிரி பலவானாயிருந்தால் இந்தக் கூலிப் படைகள் தாக்குப் பிடிப்பது கடினம். அசுரர்களது ராஜா அல்லது ராஜப் பிரதிநிதி, படைத் தலைவர்கள், இவர்களது வாழ்க்கையின் ஒரே லட்சியம் சகல போகங்களையும் அனுபவிப்பது. படைத்தலைவன் ஒவ்வொருவனுக்கும் நூற்றுக்கணக்கான மனைவியரும் அடிமைகளும் இருந்தனர். மனைவியரையும் அடிமைகள் மாதிரியே வைத்திருந்தனர். அசுர அரசன் சமீபத்தில் சில ஆரிய நங்கையரையும் பலவந்தமாகச் சிறைப்பிடித்து, தனது அந்தப்புரத்திலேயே சேர்த்துக்
கொண்டானென்றும் பலர் சொல்லினர். இதனால் ஆரியர்களிடையே மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது. அசுரர்களுடைய தலைநகரம் எல்லைப் புறத்திலிருந்து மிகுந்த தூரத்தில் இருந்தது. அதை ஆரியர்கள் இன்னும் பார்த்ததுகூடக் கிடையாது. ஆகவே ஆரிய ஸ்திரிகள் தூக்கிச் செல்லப்பட்ட கதை ஆதாரமற்றது என்று பலர் கருதினார்கள்.
புஷ்கலாவதி நகரிலிருந்து பலவிதமான ஆபரணங்கள் பஞ்சாடைகள், ஆயுதங்கள் முதலிய எத்தனையோ பொருள்கள் சுவாத நதிப் பிரதேசத்தில் மட்டுமென்ன, அதற்கு மேலும் மலைப் பிரதேசங்களிலுள்ள குடிசைகளுக்குங் கூடச் சென்று பரவின. சுவாத நதிப் பிரதேசத்தின் பொன்னிறக் கூந்தலையுடைய ஆரிய அழகிகள் அசுர சிற்பிகள் செய்யும் ஆபரணங்களிடையே மயங்கிக் கிடந்தனர். இந்த மயக்கம் வருடந்தோறும் அதிகமான எண்ணிக்கையில் ஆரிய அழகிகளைப் புஷ்கலாவதி நகரத்திற்கு இழுத்துச் சென்றது.
பாவம், சுமேதன் உண்மையிலேயே உஷாவை விதவையாக்கி விட்டுச் சென்றுவிட்டான். இப்பொழுது அவள் தனது ஒன்றுவிட்ட மைத்துனன் புருதானனின் மனைவி. இவ்வருஷம் உஷா புஷ்கலாவதி நகருக்கு வந்திருந்தாள். நகருக்கு வெளியே இருந்த வியாபாரிகளின், கூடாரங்களிலே பல அழகிய யுவதிகளைப் பார்த்த புஷ்கலாவதியின் நகராதிபனுடைய ஆட்கள் இச்செய்தியைத் தங்கள் எஜமானனுக்குத் தெரியப்படுத்தினார்கள். அவன் உடனே இவ்வியாபாரக் கூட்டம் திரும்பிப் போகும் போது, மலைக்கணவாயில்
அவர்களைத் தாக்கி, அந்த யுவதிகளைப் பிடித்துக் கொண்டு வரவேண்டுமென்று திட்டமிட்டான். இது ஒரு முட்டாள்தனமான திட்டமென்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த மலைவாசிகளின் அஞ்சாமையும், போர் செய்யும் திறமையும் நகராதிபனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நகராதிபனுக்கும், அறிவுக்கும்தான் சம்பந்தமே கிடையாதே. நகரத்தின் பெரிய பெரிய வியாபாரிகள் எல்லாம் இவனை வெறுத்தனர்; புருதானனுக்குச் சிநேகிதனான
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 86, புத்தகங்கள், அசுர, ஆரிய, பக்கம், புஷ்கலாவதி, கங்கை, வால்காவிலிருந்து, செய்யும், நதிப், அந்த, பெரிய, சுவாத, யுவதிகளைப், நகருக்கு, தனது, படைகள், சிறந்த, அடிமைகள், இந்தக், பலர், மிகுந்த