வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 85
அசுரர்களுடைய அந்த நகரம் மிக்க அழகு வாய்ந்தது. சுட்ட செங்கல்லினால் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், வீதி அமைப்பு, சாக்கடை வசதி, சிறிய பெரிய குளங்கள், தடாகங்கள் முதலிய எல்லா வசதிகளும் அந்நகரிலே அழகாகச் செய்யப்பட்டிருந்தன. அந்நகரத்தின் அழகையும் சிறப்பையும் ஆரியர்களும் மறுக்கவில்லை. கட்டையான மூக்கு, கூந்தலின் கரிய நிறம், வளர்த்தியின்மை இவைகள் ஆரியர்களுக்குப் பிடிக்கா விட்டால்கூட அசுர யுவதிகளில் சிலர் நல்ல அழகிகள் என்பதையும் ஆரியர்கள் ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். ஆயினும் பெரிய பெரிய மரத் துண்டுகளால் கட்டப்பட்டுத் தேவதாருக்களின் தழைகளால் வேயப்பட்ட அழகிய சிறிய சிறிய வீடுகள் வரிசை வரிசையாக நிற்கும் தங்கள் மங்கலபுரி, ‘புஷ்கலாவதிப் பெரு நகரத்தை விடத் தாழ்ந்தது’ என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராயில்லை. புஷ்கலாவதி நகரத்தில் ஒரு மாத காலம் தங்குவதுகூட அவர்களுக்குக்
கஷ்டமாயிருக்கும். அதற்குள் பலமுறை தங்கள் ஜன்மபூமியின் நினைவு வந்துவிடும். அதே சுவாத நதிதான் புஷ்கலாவதிக்குப் பக்கத்திலும் ஓடுகிறது. ஆயினும் தங்கள் பிரதேசத்திலுள்ள ருசி இங்கே அந்தத் தண்ணீருக்கில்லையென்பது ஆரியர்களின் கருத்து. அசுரர்களின் கைப்பட்ட உடனேயே அந்த நீரின் புனிதத் தன்மை கெட்டுப் போய் விடுவதாக அவர்கள் சொல்வார்கள். எது எப்படியிருப்பினும், அசுரர்களைத் தங்களுக்குச் சமமாகக் கருத ஆரியர்கள் தயாராகயில்லை. மேலும் அசுரர்களிடையே உள்ள அடிமை வியாபாரப் பழக்கத்தையும் அசுர நகரத்தின் ஒரு பகுதியில் தங்கள் உடலை விற்கத் தயாராய் நிற்கும் வேசியர்களையும் பார்த்த ஆரியர்கள், அசுரர்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள்தான் என்று கருதினார்கள்.
ஆனால், தனிப்பட்ட முறையில் இரு சமூகத்தையும் சேர்ந்த பலரிடையே நட்புரிமை தோன்றி வளர்ந்தது. அசுரர்களுடைய அரசன் புஷ்கலாவதியிலிருந்து தூரத்திலேயுள்ள சிந்து நதிக் கரையிருலிக்கும் ஒரு நகரத்தில் வசித்து வந்தான். ஆகையால் புருதானன் அவனைப் பார்த்ததில்லை. ஆனால் ராஜாவின் பிரதிநிதியாக புஷ்கலாவதியிலிருக்கும் அதிகாரியை இவன் பார்த்திருக்கிறான். குட்டையான, பருத்த சரீரத்தை உடைய அந்த அரசப் பிரதிநிதி ஒரு பெரிய சோம்பேறி. அவனுடைய உடல் பெருமதிப்புள்ள தங்க ஆபரணங்களைச் சுமந்து கொண்டிருந்தது. குடி மயக்கத்தால் அவனுடைய கண்கள் சொருகிச் சொருகி விழித்துக் கொண்டிருந்தன. அவனுடைய காதுகள் தொளையிட்டு வளர்க்கப்பட்டுத் தோளிலே தொங்கிக் கொண்டிருந்தன. அவன்
அழகின்மைக்கும் அறிவின்மைக்கும் ஓர் உதாரணம் என்று கருதினான் புருதானன். இந்த அதிகாரி அரசனுடைய மைத்துனன் என்றும், அந்த ஒரே ஒரு தகுதிக்காகத்தான் இவனுக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புருதானன் கேள்விப்பட்டிருந்தான். இவ்வித நிர்வாக அதிகாரியைக் கொண்ட
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 85, புத்தகங்கள், அசுர, தங்கள், பெரிய, அந்த, ஆரியர்கள், வால்காவிலிருந்து, புருதானன், அவனுடைய, சிறிய, கங்கை, பக்கம், நகரத்தில், சிறந்த, கொண்டிருந்தன, அசுரர்கள், சிலர், நிற்கும், தயாராயில்லை, அசுரர்களுடைய, ஆயினும், வீடுகள்