வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 63
“ஆம்; வைத்திருக்கிறேன்.”
“இருந்தாலும் அதைக்கொண்டு கடைந்து அக்னியை உண்டாக்கி விடுவது சுலபமல்ல. என்னிடத்தில் ஒரு புனிதமான அரணி (தீக்கடைக் கோல்) இருக்கிறது. அது எங்களுடைய வீட்டில் பாட்டனார் காலத்திலிருந்து கையாளப்பட்டு வருகிறது. இந்த அரணியைக் கொண்டு கடைந்த நெருப்பு அநேக யாகங்களுக்கும், தேவ பூஜைகளுக்கும் உதவி இருக்கிறது. அக்கினி பகவானுடைய மந்திரமும் எனக்குத் தெரியும். நெருப்பைப் பற்றி நமக்கு வழியில் கவலை இல்லை,”
“புருகூத! இப்போது நாம் இரண்டு பேரிருப்பதால் புலியுங்கூட நெருங்கிவரப் பயப்படுமல்லவா?”
“சந்தேகமில்லாமல். இன்னும் நம்முடைய நாய் வேறு இருக்கிறது.”
இவ்விதம் கூறிய புருகூதன் தன் நாயின் பெயரைச் சொல்லி “ஜப்ரா” என்று அழைத்தான். உடனே அது வாலை ஆட்டிக்கொண்டு சமீபமாக வந்து அவன் கால்களை நக்கியது.
இதைப் பார்த்த ரோசனாவும், “ஜப்ரா, ஜப்ரா” என்று அழைத்தாள். உடனே அது அவளுடைய கால்களை மோந்து பார்க்க ஆரம்பித்தது. அவளும் அதனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள். வாலை ஆட்டிக்கொண்டே அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது.
“ரோசனா! ஜப்ரா நல்ல அறிவுள்ள நாய்!”
“புஷ்டியாயும் இருக்கிறது.”
“ஆம். ஓநாய், புலி, கரடி முதலிய எந்த மிருகங்களைக் கண்டாலும் அது பயப்படுவதில்லை”
கழுதைகளும், ஆடுகளும் வயிறு நிறைய மேய்ந்திருந்தன. இவர்களும் களைப்பை ஆற்றிக் கொண்டார்கள். ஆனதால், பாதசாரிகளாகிய இந்த இருவரும்-யுவனும் யுவதியும், தங்கள் நடையை மேற் கொண்டார்கள்.
ஜப்ராவும் இவர்களுக்குப் பின்னே நடந்தது. ஊன்றி நடப்பதற்கு கையிலே தடி இருந்தாலும் கூட மலை ஏற்றம் கடுமையாக இருந்ததால் அடிமேல் அடி யெடுத்து வைத்தே நடக்க முடிந்தது. வழி நெடுக, புருகூதன் திராட்சை, ஸ்ட்ரா பரி முதலிய பழங்களைப் பறித்து ரோசனாவுக்குக் கொடுத்தான். ஆனால் அவை இன்னும் பழுப்பதற்கு நாளாகும். அவைகள் நன்றாகப் பழுத்திருக்கும் காலத்தில் வரவில்லையே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.
பேசிக்கொண்டே இவர்கள் மாலைவரை நடந்தனர். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கலகலவெனச் சப்தமிட்டுக் கொண்டுவரும் சிற்றருவியும் அதற்குப் பக்கத்தே கொஞ்சம் சமவெளியையும் பார்த்த இருவரும் அதுவே இராத்திரிப் பொழுதைக் கழிப்பதற்குத் தகுந்த இடம் எனத் தீர்மானித்தனர். உடனே புருகூதன் தன்னுடைய பையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ரோசனாவினுடைய சுமையை இறக்கினான். அப்பால் இருவரும் கழுதைகள், ஆடுகளின் மீதிருந்த சுமைகளை இறக்கினார்கள். ஆடுகளைப் பலவந்தமாகப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 63, புத்தகங்கள், இருக்கிறது, புருகூதன், உடனே, வால்காவிலிருந்து, கங்கை, இருவரும், பக்கம், பார்த்த, கொண்டார்கள், கால்களை, முதலிய, இன்னும், சிறந்த, அரணி, “ஆம், நாய், வாலை