வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 54
அமிர்தாஸ்வனை அந்தக் குரு-குலத்துக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுத்த நன்னாளை அக்கிராமத்தார் உற்சவமாகக் கொண்டாடினார்கள். அன்று யுவர்களும், யுவதிகளும், தற்காலிக மணவாழ்க்கை நடத்தச் சுதந்திரம் உண்டு. இரவெல்லாம்
நாட்டியத்திலும், மதுவிலும் இன்ப லீலைகளிலும் மக்கள் மயங்கிக் கிடந்தனர். வெயிற் காலமாதலால் இவர்கள் வளர்க்கும் மிருகங்கள் நதிக்கரையிலும் மலை அடிவாரங்களிலும் எதேச்சையாக மேய்ந்து திரிந்தன. களியாட்டத்தில் திளைத்துக் கிடக்கும் இவர்கள் தங்களுக்கும் எதிரிகள் உண்டு என்பதை மறந்தேவிட்டனர். ஆடு, மாடு, குதிரை முதலிய கால்நடைச் சொத்து பெருகுவதோடு கூடவே பகைமையும் போட்டியும் வளர்கிறது. இந்த குரு-குலத்தார், வால்கா நதிப் பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில், இவர்கள் மிருகங்களை வளர்த்து வரவில்லை. அப்பொழுது இவர்கள் தங்களுடைய உணவுத் தேவைக்கு வேட்டையையும் காட்டுக் கனிகளையுமே நம்பியிருந்தார்கள். இவை ஒன்றும் கிடைக்கவில்லையானால், பட்டினியும் கிடந்தார்கள். ஆனால் இவர்கள் ஆடு,மாடு, குதிரைகளை வீட்டில் வளர்க்கத் தொடங்கிய பிறகு அவற்றிலிருந்து இவர்களுக்கு மாமிசம், பால், தோல் முதலிய பொருள்கள் கிடைத்ததோடு, ஆடைகளுக்கு வேண்டிய ரோமங்களும் கிடைத்தன. குரு-குலத்துப் பெண்கள் ரோமங்களைப் பக்குவப்படுத்தி நல்ல கம்பள ஆடைகள் நெய்வதில் திறமை பெற்றிருந்தார்கள். ஆனால் இவர்களுடைய இந்தத் திறமை சமூகத்தில் அவர்களுக்கு - அந்தப் பெண்களுக்கு முன்பு இருந்த சுதந்திரத்தை இழக்கச் செய்து விட்டது. இப்பொழுது சமூகத்தில் பெண்களுடைய ராஜ்யம் இல்லை, ஆடவர்களுடைய ராஜ்யம். ஒரு பெண் அந்தச் சமூகத்திற்கும் சமூகக் குழுவிற்கும் தலைவியாயிருந்தது போய், இப்பொழுது ஒரு யுத்த வீரனுடைய, யுத்தத்தில்
தலைமை தாங்கி வெற்றி கண்ட ஒரு ஆடவனுடைய ராஜ்யம் நடைபெறுகிறது. இவன் சமூகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும் பெரும்பாலான காரியங்களைத் தன் விருப்பப்படியே செய்துவிடுகிறான்.
சொத்து! பெண்கள் தலைமை தாங்கிய ராஜ்யத்தில் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவே இருந்தது; ஒன்றாகவே வேலை செய்தது. இப்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாகக் கால்நடைச் சொத்துக்களிருக்கின்றன. அவற்றின் லாப-நஷ்டங்களும், அந்த அந்தக் குடும்பத்தையே சேர்ந்தது. ஆயினும், எல்லோரையும் பாதிக்கக்கூடிய நெருக்கடியான காலத்தில் எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பொறுப்புடன் காரியம் செய்கின்றனர்.
அமிர்தாஸ்வனைத் தலைவனாக்கி அதற்காகக் கொண்டாடப்படும் இன்றைய விழாவின் களியாட்டத்தில் திளைத்துக் கிடந்த அந்த ஜனங்களுக்கு, தங்களுடைய கால்நடைகளைப் பற்றிய நினைவே இல்லை. அவர்கள் என்ன
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 54, புத்தகங்கள், இவர்கள், அந்தக், பக்கம், குரு, இப்பொழுது, ராஜ்யம், வால்காவிலிருந்து, கங்கை, முதலிய, தங்களுடைய, திறமை, பெண்கள், சமூகத்தில், காலத்தில், தலைமை, அந்த, இல்லை, களியாட்டத்தில், சுதந்திரம், மிருகங்களை, இந்தச், சிறந்த, வேலை, உண்டு, கால்நடைச், மாடு, திளைத்துக், சொத்து