வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 45
“அப்படியானால் உன்னுடைய பெயர் மாற்றமாகவல்லவா இருக்கிறது?” (கிரிச்ராஸ்வன்-கஷ்டப்படுபவன்)
“என்னுடைய தாய் தகப்பனார் காலத்தில் எங்களுடைய வீட்டிலே குதிரைகள் மிகவும் குறைவு. அதனாலே இந்த மாதிரிப் பெயர் வைத்திருக்கிறார்கள்.”
“அப்படியானால் இப்பொழுது ருத்தாஸ்வன் (பாக்கியம் உள்ளவன்) என்றல்லவா வைக்க வேண்டும்?”
“நல்லது, உள்ளே வா.”
“பரவாயில்லை; இங்கேயே இருப்போமே; தேவதாருவின் நிழலும், இந்தப் பசும்புல் தரையும் மிகவும் நன்றாயிருக்கிறதே!”
“அப்படியானால் சரி, சோமா! மதுவினாலும் மாமிசத்தினாலும், இங்கேயே நண்பனை உபசரிப்போம்.”
கிரிச்ராஸ்வ! நீ குதிரை மேய்க்கப் போவதற்கு நேரமாக வில்லையா?”
“பரவாயில்லை. எத்தனையோ நாட்களுக்குப் பிறகு நீ இப்பொழுது வந்திருக்கிறாய். இன்றைக்கு இல்லையானால் நாளைக்குப் போனால் போகிறது.”
திருஜ்ராஸ்வனும், கிரிச்ராஸ்வனும் அந்தப் பசும் புல் தரையில் உட்கார்ந்தனர். அவர்களுக்கு நடுவே அமிர்தாஸ்வனும் உட்கார்ந்து கொண்டான். மதுவையும், மாமிசத்தையும் கொண்டுவந்த தோல் பாத்திரங்களைத் தரையிலே வைத்த சோமா, “கொஞ்சம் இருங்கள்! விரிப்பை எடுத்து வருகிறேன். அதன் மீது உட்கார்ந்து கொள்ளலாம்” என்றாள்.
“சோமா! வேண்டாம், இந்தப் பசும்புல் தரையே போதும், ரொம்ப நன்றாயிருக்கிறது” என்றான் திருஜ்ராஸ்வன்.
உடனே சோமா தன் நண்பனைப் பார்த்து, “திருஜ்ராஸ்! உப்புப் போட்டுச் சமைத்த மாமிசம் உனக்குப் பிரியமா? அல்லது நெருப்பிலே சுட்டதா? இது எட்டு மாதக் குட்டியினுடைய மாமிசம், எவ்வளவு மிருதுவாயிருக்கிறது பார்த்தாயா?”
“சோமா! எனக்கு நெருப்பிலே சுட்ட மாமிசந்தான் பிரியம். நான் பூராக் குதிரையையும் அப்படியே நெருப்பிலே சுட்டுவிடுவேன்; ஆனால் நேரமாய் விட்டது. இந்த மாமிசமும் ரொம்ப நன்றாயிருக்கிறது. ஆனால் சோமா! எனக்கு அளிக்கும் மதுக் கிண்ணத்தை உன்னுடைய அழகிய உதடுகளால் இனிப்பூட்ட வேண்டும்.”
“ஆம், சோமா! நம்முடைய நண்பன் வெகு நாட்கள் கழித்து வந்திருக்கிறான்” என்றான் கிரிச்ராஸ்வனும்.
“இதோ வந்து விடுகிறேன். நெருப்பு நிறைய இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 45, புத்தகங்கள், சோமா, நெருப்பிலே, பக்கம், “அப்படியானால், கங்கை, வால்காவிலிருந்து, கிரிச்ராஸ்வனும், பசும்புல், உட்கார்ந்து, “சோமா, மாமிசம், இந்தப், என்றான், ரொம்ப, எனக்கு, வேண்டும், உன்னுடைய, நான், “ஆம், சிறந்த, பெயர், இருக்கிறது, “பரவாயில்லை, இப்பொழுது, மிகவும், இங்கேயே