வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 44
இன்றைக்கு உன்னுடைய ஞாபகம் உதித்தது; உடனே வந்து விட்டேன்!”
“இத்தனை நாட்களுக்குப் பிறகாவது என் ஞாபகம் உனக்கு வந்ததே, அது வரை நல்லதுதான். அமிர்தாஸ்வன் போஜனத்துக்காக வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறான். இதோ நான் தண்ணீர் எடுத்துக் கொள்கிறேன். இருவரும் போவோம்!”
வார்த்தையாடிக் கொண்டே இருவரும் நதிக்கரை சென்றனர். சோமா பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, திருஜராஸ்வன் பின்னே நடக்கிறான்.
“சோமா! அமிர்தாஸ்வன் பெரியவனாகி விட்டானா?”
“ஆம்! நீதான் பல வருஷங்களாக இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையே?”
“பல வருஷங்களா? ஏது, நாலே நாலு வருஷங்கள்.”
“இப்பொழுது அவனுக்குப் பன்னிரண்டு வயதாகிறது. உண்மையைச் சொல்கிறேன். அவனைப் பார்க்கும் பொழுது எல்லாம் உன் ஞாபகமே எனக்கு வரும்; உன் மாதிரியே இருக்கிறான்.”
“இருக்கலாம். அந்தக் காலத்தில் உன்னுடைய தயவுக்குக் காத்திருந்தவர்களில் நானும் ஒருவனல்லவா? இதுவரை அமிர்தாஸ்வன் எங்கே இருந்தான்?”
“வால்ஹீகாவிலே அவனுடைய தாத்தாவிடம்,” இருவரும் வீட்டை அடைந்தனர். உள்ளே சென்று தண்ணீர்ப் பாத்திரத்தை இறக்கி வைத்த சோமா, தன்னுடைய நாயகன் கிரிச்ராஸ்வனிடம், திருஜ்ராஸ்வன் வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தாள். உடனே இருவரும் மகன் பின் தொடர கூடாரத்துக்கு வெளியே வந்தார்கள். திருஜ்ராஸ்வன் கை கூப்பி வணங்கி, “நண்ப கிரிச்ராஸ்வ! எல்லோரும் சௌக்கியந்தானே?” என்றான்.
“அக்கினி பகவானுடைய கிருபையால் சௌக்கியமாயிருக்கிறோம். வா, வா, இப்போதுதான் சோமக் கிழங்கை இடித்துப் புது மது தயாரித்திருக்கிறேன்.”
“சோமபானமா! இவ்வளவு அதிகாலையிலா?”
“நான் குதிரை மேய்க்கப் போகவேண்டும். இதோ குதிரைகள் தயாராய் நிற்பதை நீ பார்க்கவில்லையா?”
“அப்படியானால் நீ இன்றைக்குச் சாயந்திரம் கூடத் திரும்பி வர மாட்டாயா?”
“இருக்கலாம்; அதனாலேயே குதிரை மாமிசமும், மதுவும் சோமா தயாரித்து வைத்திருக்கிறாள்.”
“குதிரை மாமிசமா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 44, புத்தகங்கள், பக்கம், இருவரும், வால்காவிலிருந்து, அமிர்தாஸ்வன், கங்கை, சோமா, திருஜ்ராஸ்வன், குதிரை, எடுத்துக், “இருக்கலாம், உடனே, சிறந்த, நாட்களுக்குப், உன்னுடைய, ஞாபகம், தண்ணீர்