வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 360
“உங்களுடைய சொல் அம்புகளைக் கேட்டு எனக்குக் கோபம் ஏற்படவில்லை.”
“புண்பட்ட மனம்; இளமையின் துடிப்பு ஓஜாஜி! என் வார்த்தைகளினால் உங்களுக்கு மனக் கஷ்டம் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்!”
“இல்லை! நான் ஒன்றும் வருத்தப்படவில்லை. ஆனால், கைராட்டை, கைத்தறி போன்ற இந்தியப் பொருள்களை மறுபடியும் ஸ்தாபிப்பது முடியாது என்று கருதுகிற நீங்கள், அன்னிய நாட்டுப் பொது உடைமைக் கொள்கை இந்திய மண்ணிலே செழித்து வளரும் என்று எண்ணுகிறீர்களா?”
“சுரண்டுகிறவர்களுக்குப் பிடிக்காததெல்லாம், அன்னியம்-நடக்க முடியாதது என்று ஆகிவிடுகிறது. முதலாளிகளைக் கோடீஸ்வரர்களாக ஆக்கிவிட்ட சீனி மில்கள், அன்னிய நாட்டுப் பொருளல்ல! துணி மில், சணல்மில், காகித மில், சிமெண்டுத் தொழிற்சாலை, இரும்புத்தொழிற் சாலை, சைக்கிள், மோட்டார், பேனா, செருப்பு வரை செய்யும் அனேக இயந்திரங்கள், இவையெல்லாம் லட்சக்கணக்காக லாபத்தைக் கொடுப்பதால் அன்னிய நாட்டுப் பொருள்களல்ல! ரேடியோ, டெலிவிஷன், பிலிம், டாக்சி போன்றவை முதலாளிகளின் சட்டைப் பையைச் சப்தமில்லாமல் நிரப்பி விடுவதால் அவைகளின் அன்னியத் தன்மை போய்விடுகிறது! சுரண்டுவதற்குச் சாதகமாயுள்ள அன்னிய நாட்டு இயந்திரங்களெல்லாம் சுதேசியாகி விடுகின்றன. ஆனால் சுரண்டலை அடியோடு ஒழிக்கும் கருவியான பொதுஉடமைக் கொள்கை மட்டும், நிரந்தரமாக அன்னிய நாட்டுச் சரக்காகவே இருக்கிறது. இது தானே நேர்மை ஓஜாஜி.”
“பொது உடைமைக் கொள்கை மதத்தின் விரோதி. இந்த இந்திய தேசமே எப்பொழுதும் மத நம்பிக்கையிலேயே வளர்ந்து வந்திருக்கிறது. இந்தக் கஷ்டத்தையும் கொஞ்சம் யோசியுங்கள் சுமேர்ஜி.”
“நீங்கள் காலேஜில் படித்த படிப்பையெல்லாம் மறந்து விட்டேன் என்று சொல்கிறீர்கள். நான் என்ன சொல்ல முடியும்? நீங்கள் மதம் என்ற பெயரை எடுத்ததும் உங்களுக்கு ஹிந்து மதம்தான் ஞாபகம் வருகிறது. காந்திஜி கூட பஜாஜின் கோசம்ரக்ஷண இயக்கத்தை ஆசீர்வதிக்கிறார். அதில் பசு மாமிசத்தைத் தவிர பசுவிலிருந்து கிடைக்கக்கூடிய மற்ற எல்லாப் பொருள்களையும்
சாப்பிடுவதாகப் பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆம், கோமயம்-கோஜலம் கூடத்தான். பசு மாமிசம் சாப்பிடுபவர்களையும் சாப்பிடாதவர்களையும் பிரித்தால் இந்தியாவிலே சரிபாதிக்கு மேல் பசு மாமிசம் சாப்பிடுகிற ஜாதி என்பது உங்களுக்குத் தெரியும். இந்திய ஜனத்தொகையில் நாலில் ஒரு பங்கு முஸல்மான்கள். ஏறக்குறைய ஒரு கோடி கிறிஸ்தவர்கள். சில லட்சம் பௌத்தர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய மதங்களையும், மதம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 360, புத்தகங்கள், அன்னிய, இந்திய, கொள்கை, நாட்டுப், வால்காவிலிருந்து, கங்கை, பக்கம், மதம், மாமிசம், உடைமைக், மில், நான், சிறந்த, காந்திஜி, ஓஜாஜி, உங்களுக்கு, நீங்கள்