வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 361
விரோதிகள் என்று பிரகடனம் செய்கிறார்கள். பொது உடைமைக் கொள்கை அன்னிய நாட்டுச் சரக்கென்றே வைத்துக் கொள்வோம். கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் போன்ற அன்னிய மதங்களும், ரயில், தந்தி, விமானம், இயந்திரத்தொழிற்சாலைகள் போன்ற அன்னியப் பொருள்களும் இங்கு வந்து, நம் கண் முன்னாலேயே சுதேசியாக மாறிவிட்டிருக்கும் பொழுது, பொது உடைமைக் கொள்கையும் அவ்விதமே சுதேசியாக ஏன் மாறிவிட மாட்டாது?”
2
பாட்னாவிலே மாலை நேரத்தில் உலாவுவதற்கு லான், ஹாரடிங் பார்க் இரண்டையும் தவிர வேறு இடம் கிடையாது. அந்த இரண்டிடமும் கூட மிக மோசமான நிலைமையிலே வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொது இடங்கள் யாரையும் கவர்ந்திழுக்கும் சக்தியற்றிருந்தாலும் மாலை நேரத்தில் உலாவவோ அல்லது நண்பர்களைச் சந்திக்கவோ விரும்புகிறவர்கள் அங்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும், பாங்சிப்பூர் லானிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த மூன்று நண்பர்களின் பேச்சும் முடிவதாகத் தெரியவில்லை. அவர்களில் ஒருவன்,
“தோழா சுமேர்! மறுபடியும் ஒருமுறை நீ நன்றாக யோசித்துப் பார். நீ ரொம்ப, வேகமாகக் காலெடுத்து வைக்க நினைக்கிறாய்.”
“மரணத்தோடு விளையாடுவதைவிட வேகமாக முன்னேறுவது வேறென்ன இருக்கமுடியும், ரூப்! இந்த முடிவு பக்காவானதுதான். நான் ஒன்றும் அவசரப்பட்டுச் செய்யவில்லை. அவசரப்பட்டுச் செய்யக்கூடியதுமல்ல.”
“காற்றிலே பறப்பது தம்பி! மாளிகையின் மாடிக் கைப்பிடிச் சுவரின் ஓரத்தில் நிற்பதுகூட எனக்குப் பயமாக இருக்கிறது.”
“எத்தனையோ பேருக்குச் சைக்கிளில் ஏறுவதுகூடப் பயமாக இருக்கிறது. ஆனால் நீ, இரண்டு கைகளையும் விட்டுவிட்டுச் சைக்கிள் ஓட்டுகிறாயே!”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 361, புத்தகங்கள், நம்பிக்கை, பொது, பக்கம், அந்த, கிறிஸ்தவ, உடைமைக், வால்காவிலிருந்து, கங்கை, இருக்கிறது, தவிர, வேறு, அவசரப்பட்டுச், பயமாக, நேரத்தில், மதம், சிறந்த, அன்னிய, லார்டு, சுதேசியாக, மாலை