வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 349
“வேறு ஒன்றும் இப்பொழுது ஞாபகத்திற்கு வரவில்லை.”
“என்னுடைய சேலைகள், சீமைத் துணிகளை என்ன செய்வது?”
“காந்திஜியின் ஒத்துழையாமை, இயக்கத்தில் சேருகிறேன் என்பதற்காகச் சொல்கிறாயா? நான் துணிகளை எரிப்பதை ஆதரிக்கவில்லை. அதிலும் முக்கியமாக அன்னியத் துணிகள் மலை மலையாக இந்நகரிலே எரிக்கப்பட்டு முடிந்த பிறகு, அவசியம் என்று கருதவில்லை. எனக்கு கதர்ச்சட்டைகளும், பைஜாமாக்களும் தைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.”
“நீங்கள் ரொம்ப சுயநலம் உள்ளவர் சபதர்!”
“இந்த கனத்த முரட்டுக் கதர்ச் சேலையை உடுத்துவாயா, சகீனா?”
“உங்களோடுகூட, உலகத்தின் கடைசி எல்லைக்கும் என்னால்போக முடியும்.”
“அப்படியானால், இந்தத் துணிகளை என்ன செய்வது?”
“அதுதான் எனக்குப் புரியவில்லை.”
“சரி, இவைகளை ஏலத்தில் விற்றுவரும் தொகைக்கு, ஏழைகளுக்குத் துணி வாங்கிக் கொடுத்து விடுவோம்.”
3
சபதரைப் போன்ற பெரிய பாரிஸ்டரின் இந்த மகத்தான தியாகத்தைப் பற்றி நாலாபக்கமும் சர்ச்சைகள் நடந்தன. ஆனால் சபதர், இந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் சங்கர்தான் என்று கருதினார். அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்களிலும், பல இடங்களுக்கும் சுற்றுப் பிரச்சாரம் செய்ய சபதருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரோடுகூட, சங்கரும் சகீனாவும் போயிருக்கிறார்கள். அவருடைய மனம், கிராமத்திலேயே அதிகமாக லயித்தது. ஏனெனில், கிராமத்தின் விவசாயி, உழைப்பாளி மக்களிடம் அவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை, நகரத்தின் படித்த மக்களிடம் ஏற்படவில்லை. ஒரு வாரத்திற்குள்ளாகவே தனது இலக்கணப் பாஷையின் கால்வாசியைக் கூட ஜனங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவர் தெரிந்து கொண்டார். சங்கரோ ஆரம்பத்திலேயே கிராம மக்களுக்குப் புரியும் கிராமியப் பாஷையில் தனது பிரசங்கங்களைத் தொடங்கி விட்டாராகையால் அவருக்கு வெற்றி சுலபமாகக் கிடைத்தது. அதைப் பார்த்த சபதரும், கிராமியப் பாஷையிலேயே
பேசத் தொடங்கினார். முதலில் அவருக்குக் கஷ்டமாகவே இருந்தது. ஆயினும் தனது உழைப்பாலும், சங்கரின் உதவியாலும், வெகு சீக்கிரமாகவே கிராம ஜனங்களைக் கவரும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 349, புத்தகங்கள், பக்கம், தனது, வால்காவிலிருந்து, துணிகளை, கங்கை, அவருக்கு, கிராமியப், கிராம, மக்களிடம், செய்வது, சிறந்த, என்ன, சபதர், கிடைத்தது