வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 345
“இப்பொழுது நான் புரட்சி சேனையிலே சேர்வதற்கு-ஒத்துழையாமை
இயக்கத்திலே ஈடுபடுவதற்கு விரும்புகிறேன்.”
“இவ்வளவு சீக்கிரமாகவா?”
“ஆம், சீக்கிரமாகத்தான். நான் இதற்கு முன்னாலேயே மைதானத்தில் இறங்கியிருக்க வேண்டும். ரொம்ப தூரம் யோசித்து, சிந்தித்த பிறகு, இன்று உன்னுடைய அபிப்பிராயத்தையும் கேட்டுக் கொண்டுதான் எனது முடிவை வெளியிடுகிறேன்.”
சபதரின் கம்பீரமான முகத்திலிருந்து இந்தச் சொற்கள் வெளிவந்த பிறகு, சங்கர் எங்கேயோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவர் மௌனமாயிருப்பதைப் பார்த்த சபதர்,
“என்ன, உனது மன்னியின் லிப்ஸ்டிக்கைப் பற்றியும், பட்டுச் சேலையைப் பற்றியும், பஞ்சு மெத்தையைப் பற்றியும் இந்தப் பங்களாவைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் சகீனாவை ஒன்றும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவள் எவ்வித வாழ்க்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவளிடம் அவளுடைய சொந்தச் சொத்தும் இருக்கிறது. மேலும் இந்தப் பங்களாவும் என் தந்தையார் விட்டுச் சென்ற பல கிராமங்களும் கொஞ்சம் ரொக்கமும் இருக்கின்றன. இவை எதுவும் என்னைக் கவரவில்லை. இவைகளைக் கொண்டு இவள் இஷ்டம் போல தனது வாழ்க்கையை நடத்தலாம்.”
“நான் மன்னியைப் பற்றியோ அல்லது உன்னைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கவில்லை. என்னைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் பாதையிலே இருந்த சில சந்தேகத் தடைகளும் இப்பொழுது நீங்கிவிட்டன. வா! சகோதரர்களாகிய நாம் இருவரும் ஒன்றாகவே புரட்சிப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 345, நான், புத்தகங்கள், பற்றியும், யோசித்துக், பொது, வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, தனது, பிறகு, வாழ்க்கையை, பற்றியோ, புரட்சியின், இந்தப், எனது, தொடங்கினேன், சிறந்த, ஒத்துழையாமை, அல்லது, கொண்டு, இன்று, சரியானது