வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 341
“ஆனால் இவைகளுக்கும் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கொள்கை மாற்றமடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?”
“நாள்தோறும் வளர்ச்சியடைந்து வரும் இயந்திரங்கள், பெருகிவரும் தொழிற்சாலைகள், குவிந்துகொண்டிருக்கும் மூலதனம், இவை யாவற்றையும் லாபகரமான வழியிலே உபயோகிப்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா? 1874 முதல் 1880 வரை பதவி வகித்த டிஸ்ரைலி மந்திரிசபை அதைச் செய்து முடிந்தது. 1880 முதல் 1892 வரை பதவி வகித்த தாராளக் கட்சி கிளாட்ஸ்டன் சர்க்கார்டிஸ்ரைலி முன்னேறிய பாதையிலிருந்து பின்வாங்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் பகிரங்கமான சாம்ராஜ்யக் கொள்கையினுடைய ராக்ஷஸத் தன்மையை மறைப்பதற்கு
ஏதாவது ஒரு அலங்காரமான வேஷம் தேவையாயிருந்தது. அதற்காகச் சாதாரண ஜனங்களை ஏமாற்றும் பொருட்டு டிஸ்ரைலி, இந்திய சக்கரவர்த்தினி என்ற தர்பார் நாடகத்தை நடத்தி முடித்தான். அவருக்குப் பின் வந்த தாராளக் கட்சியினர், தங்கள் தாராளத் தன்மையைக் காட்டுவதற்காக அயர்லாந்தின் ஹோம்ரூல்பில் என்ற நாடகத்தை நடித்தனர். ஆயினும், அயர்லாந்தின் பிரச்னை அன்றுபோலவே இன்றும் இருக்கிறது. இந்தத் தாராளத்தன்மையை உபயோகித்துக்கொண்டு பலனடைய வேண்டுமென்று நமது இந்திய ஸாஹிப்புகள், 1886ல் காங்கிரசைத் தோற்றுவித்தார்கள். உண்மையில் காங்கிரஸ் பிரிட்டிஷ் தாராளக்கட்சியின் வளர்ப்புப்பெண்ணாகவே உலகத்தில் தோன்றியது. நீண்ட காலம்வரை அவ்விதமே இருந்தும் வந்தது. ஆனால், 1895- லிருந்து 1905 வரை பத்துவருட காலம் பிரிட்டனில் மறுபடியும் டோரிகளின் சர்க்கார் ஏற்பட்டது. அது ஆல்கின், கர்ஸான் போன்ற ‘நல்ல பிள்ளைகளை’ இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் இந்தியாவிலே சாம்ராஜ்யத்தின் வேரை பலப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், பலன் விபரீதமாகவே ஏற்பட்டது.
“நீங்கள் லஜபதிராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திரபாலர் இவர்களின் செயல்களைக் குறிப்பிடுகிறீர்களா?”
“திலகர், லஜபதிராய், பால் இவர்களெல்லாம் அந்த விளைவின் வெளித்தோற்றங்கள் தான். ஜப்பான், 1904-5 யுத்தத்தில் ருஷ்யாவைத்
தோற்கடித்து, வல்லரசுகளின் சமுதாயத்தில் சேர்ந்துகொண்டதன் மூலம், ஆசியாவிலே ஒரு புதிய விழிப்பை ஏற்படுத்தியது. கர்ஸானின் வங்கப் பிரிவினையும் இந்தச் சிறிய ஆசிய நாட்டின் வெற்றியும் சேர்ந்து காங்கிரஸ் மேடைகளிலே சொல்மாரி பொழிவதை விட்டு முன்னேறிச் செல்ல இந்திய வாலிபர்களைத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 341, புத்தகங்கள், சாம்ராஜ்யக், பக்கம், மூலம், வால்காவிலிருந்து, இந்திய, கங்கை, நாடகத்தை, அயர்லாந்தின், காங்கிரஸ், லஜபதிராய், ஏற்பட்டது, தாராளக், இருக்கிறது, லிருந்து, சிறந்த, கொள்கை, கொள்கையை, வகித்த, பதவி, டிஸ்ரைலி