வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 327
நானா சாகிப்-“அந்த வதந்தியை ஜனங்கள் நம்பி விடுவார்களா என்ன?”
மங்களசிங்-“ஒரு விஷயம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, அதை மறுக்கும் குரல் தெளிவாகக் கேட்காத வரை ஜனங்கள் அதை நம்பவே செய்வார்கள்.”
நானாசாகிப்-“இந்தத் தோட்டா விஷயத்தைக் கொண்டு, ஆங்கிலேயர்கள் மதத்துரோகிகள் என்று நாம் நிரூபித்து விட்டோம். ஆகவே, அவர்கள் சொல்வது எதையும் ஜனங்கள் நம்ப மாட்டார்கள்.”
மங்களசிங்-“இது எந்தக் காலத்திற்கும் போதுமானது என்று நாம் நம்பமுடியாது. மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. நம்முடைய இந்த யுத்தத்தை ஆங்கிலேயர்கள் சிப்பாய்க் கலகம் என்றுதான் உலகத்திற்குப் பிரச்சாரம் செய்வார்கள். உலகிலே ஆங்கிலேயர்களுக்கு விரோதிகளாகவும், நமக்கு நண்பர்களாகவும் பலர் இருக்கின்றார்கள். முக்கியமாக ஐரோப்பிய ஜாதியிலேயே எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! அவர்கள் நமது சுதந்திரத்தை விரும்பவே செய்வார்கள். ஆகவே, நாம் இந்த யுத்தத்தில் எல்லா ஐரோப்பியர்களையும் விரோதிகளாகக் கருதக் கூடாது. சண்டை போடாத ஆங்கிலேயர்களையும் ஆங்கிலப் பெண்கள், குழந்தைகள், கிழவர்களையும் நாம் ஒன்றும் செய்யக் கூடாது. அவர்களுக்குத் தீங்கிழைப்பதால் நமக்கொன்றும் லாபம் ஏற்படாது. நேர் விரோதமான பலன் தான் ஏற்படும். உலகத்திலே இந்தியாவின் பெயர் களங்கமடைந்துவிடும்.”
நானாசாகிப்-“இது சேனாதிபதிகள் கவனிக்க வேண்டிய வேலை. எந்தெந்தச் சமயத்தில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதை
அந்தந்தச் சமயத்தில் நிச்சயிப்பதுதான் நல்லது.”
மங்களசிங்-“முடிவாக ஒரு விஷயம் நான் சொல்ல விரும்புகிறேன். சிப்பாய்கள் இந்த யுத்தத்திலே தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராட வேண்டும். மேலும், நாம் பொது ஜனங்களின் உதவியையும் பெற வேண்டும். ஆகவே, அதற்கு இந்தத் தோட்டாக்களில் கொழுப்புத் தடவிய கதையையே முற்றிலும் நம்பியிருக்கக் கூடாது. நாம் ஆங்கிலேயர்களை வெளியேற்றிவிட்டு, எந்த மாதிரி ராஜ்யத்தை நடத்தப் போகிறோம்; அந்த ராஜ்யத்தில்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 327, நாம், புத்தகங்கள், மங்களசிங், ஜனங்கள், செய்வார்கள், கூடாது, ஆகவே, பக்கம், வேண்டும், வால்காவிலிருந்து, கங்கை, “இது, சமயத்தில், எப்படி, ஆங்கிலேயர்கள், நானாசாகிப், சிப்பாய்கள், வைத்துக், தான், விஷயம், சிறந்த, கொள்ள