வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 326
ஆங்கிலேயர்கள் மிகப்புத்திசாலிகள் நானா சாகிப்! பேஷ்வாவையும் அவதத்தின் நவாப்பையும்போல, அவர்கள் தலீப்சிங்கையும் இந்தியாவிலேயே சிறை வைத்திருந்தார்களானால், இன்று சீக்கியப் பட்டாளங்களை நம் பக்கத்தில் சேர்த்துக் கொள்வதில் தாம் சுலபமாக வெற்றி பெற்றிருக்கமுடியும். சரி; சீக்கியச் சிப்பாய்களும் நேப்பாளச் சிப்பாய்களும் இப்போது நம்முடன் சேரவில்லையென்பதை மறந்துவிடக் கூடாது. மேலும் தேசத்தின் போராட்டத்திலே நம்மோடு சேர்ந்து கொள்ளாதவர்களை, நாம் நண்பர்கள் என்று நம்பக்கூடாது.”
“நீங்கள் சொல்வது சரி, டாகூர் சாகிப்; ஆனால் நாம் தொடக்கத்திலே வெற்றி பெற்று விட்டோமானால் தேசத் துரோகிகள் கூட நமக்கு எதிராக வரத் துணியமாட்டார்கள்.
“ஒரு முக்கியமான விஷயத்திற்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். அது யுத்தம் தொடங்கிய பிறகு செய்ய வேண்டிய வேலையானாலும், அதற்கான ஆட்களை இப்பொழுதிலிருந்தே தயார் செய்ய வேண்டும். இந்த யுத்தம் தேசத்தை விடுதலையடையச் செய்யும் யுத்தம்; நாம் சுதந்திரச் சிப்பாய்கள் என்று ஜனங்கள் நம்பும்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.”
மத்தியிலே ஒரு பிரதிநிதி குறுக்கிட்டு, “நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து நிற்பதே இதற்குப் போதுமான சான்றில்லையா?” என்று கேட்டார்.
மங்களசிங்-“எல்லா இடத்திலும் இருபத்தி நாலுமணி நேரமும் யுத்தம் நடந்து கொண்டே இருக்காது. ஆங்கிலேயர்களை வெற்றி கொள்ள முடியாது
என்று நம்புகிற பயங்கொள்ளிகளும், சுயநலமிகளும் நம் நாட்டில் ஏராளமாயிருக்கிறார்கள். அவர்கள் விதவிதமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருப்பார்கள். ஆகவே நாம் கிழக்கு, மேற்கு, மத்தியபாகம் என்று மூன்று பகுதியாகப் பிரித்துக் கொண்டு ஹிந்தியிலும் உருதுவிலும் மூன்று பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என்று கருதுகிறேன்.”
நானா சாகிப்- “உங்களுக்கு ஆங்கில முறைகள் மிகவும் பிடித்திருக்கின்றன. டாகூர் சாகிப்! எந்தப் பத்திரிகையையும் வெளியிடாமலேயே, தோட்டாவைப் பற்றிய கதையை நாங்கள் எவ்வளவு நன்றாகப் பரப்பியிருக்கிறோம் பார்த்தீர்களா?”
மங்களசிங்-“யுத்தத்தின் மத்தியிலே, ஆங்கிலேயர்களின் வேலைக்காரர்களும், கைக்கூலிகளும் நமக்கு விரோதமான கருத்துகளைப் பரப்பிக் கொண்டே இருப்பார்கள். அதைத் தடுப்பதற்கு நாம் ஏதாவது ஏற்பாடு செய்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 326, நாம், புத்தகங்கள், சாகிப், செய்ய, வேண்டும், யுத்தம், பக்கம், வெற்றி, நானா, வால்காவிலிருந்து, கங்கை, மத்தியிலே, ஆங்கிலேயர்களை, மங்களசிங், மூன்று, பரப்பிக், கொண்டே, சிறந்த, நமக்கு, கொண்டு, சேர்ந்து, மேலும், பட்டாளங்கள், சீக்கியப், செய்யும், டாகூர், சிப்பாய்களும், ஏற்பாடு