வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 325
காப்பதற்காகச் சிப்பாய்களுக்குத் தலைமை வகிக்க விரும்புகிறார்கள்.
ஆனால், இந்த எல்லாக் குறைகளுக்கும் மத்தியிலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி யோசித்தபொழுது, தான் செய்யவேண்டியது என்ன என்பதை நிச்சயிக்க மங்களசிங்கிற்கு நேரமாகவில்லை. இந்தியா ஆங்கில முதலாளிகளுடைய ஆட்சியிலும் இரட்டை அடிமைத் தனத்திலே நசுங்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஆங்கில முதலாளிகளின் ஆட்சி மிகச் சக்தி வாய்ந்ததும் திறமையுள்ளதும் ஆகும். அதை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டால், சுயநலச் சிற்றரசர்களோடு மோதுவது இந்திய ஜனங்களுக்குச் சுலபமான வேலை.
ஜனவரி மாதம் ஒருநாள் இரவு நன்றாகப் பனி பெய்து கொண்டிருந்தது, லண்டனோடு ஒப்பிட்டால் இந்தப் பனி ஒன்றுமில்லைதான். பிட்டூரிலே, எங்கும் அமைதியும் நிசப்தமும் நிலவியிருந்தது. ஆனால் பேஷ்வாவின் மாளிகையில், காவலர்கள் தங்கள் தங்கள் இடத்திலே ஜாக்கிரதையாக நின்று கொண்டிருக்கிறார்கள். தங்கள் எஜமானரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு மனிதரோடு ஒரு புதிய மனிதரும் மாளிகைக்குள் நுழைவதை அவர்கள் பார்த்தார்கள். இப்பொழுதெல்லாம் முன்பின் தெரியாத பலர் இம்மாதிரி இரவிலே மாளிகைக்கு வந்துபோவது வழக்கமாகிவிட்ட படியால் அவர்கள் தடுக்கவில்லை.
மங்களசிங் நானாவைச் சந்திப்பது இது முதலாவது முறையல்ல. ஒருவரையொருவர் ஏற்கெனவே நன்றாய் அறிந்திருந்தார்கள். மங்களசிங்
வருவதற்கு முன்னாலேயே, அங்கு டெல்லியில் பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கும் பாதுஷா, அவதத்தின் நவாப், ஜகதீஷ்பூரின் கும்வர்சிங் முதலிய அரசர்களின் தூதர்கள் வந்து காத்திருந்தார்கள். கல்கத்தா, தானப்பூர், கான்பூர், லக்னௌவ், ஆக்ரா, மீரட் முதலிய இடங்களிலுள்ள ராணுவப் பாசறைகளிலெல்லாம் சிப்பாய்களிடையே கலக உணர்ச்சி எவ்வளவு தூரம் பரப்பப்பட்டிருக்கிறது என்பதை, அவரவர்களும் விளக்கிச் சொன்னார்கள். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் ஒரு மகத்தான சக்தியோடு மோதி அதை ஒழிக்க விரும்புகிறவர்கள், தங்களுக்கென்று ஒரு சிறிய ராணுவம்கூட இல்லாமல், எதிரிகளிடமிருந்து கலகம் செய்யும் சிப்பாய்களையே நம்பியிருந்ததுதான். மேலும், ஒரு விநோதம், ராணுவக் கலையை சிறிதும் பயிலாத சிற்றரசர்களும், தலைவர்களும் சேனாதிபத்தியத்தை ஏற்கத் தயாராய் இருந்ததுதான். நானா மிகுந்த நம்பிக்கையோடு பேசத் தொடங்கினார்:
“இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியப் பட்டாளங்களை நம்பித்தான் இருக்கிறது. இப்பொழுது அந்தப் பட்டாளங்கள் யாவும் நம்மிடம் வந்து கொண்டிருக்கின்றன.”
“ஆனால் இந்தியப் பட்டாளங்கள் முழுவதும் நம்மோடு சேர்ந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 325, புத்தகங்கள், வால்காவிலிருந்து, தங்கள், பக்கம், கங்கை, முதலிய, மங்களசிங், இந்தியப், பட்டாளங்கள், வந்து, ஆங்கில, சிறந்த, இப்பொழுது, என்பதை, இதில், ஆட்சி