வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 324
கலகத் தலைவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள மங்களசிங்கிற்கு நேரமாகவில்லை. பதவிகளை இழந்து விட்ட
சிற்றரசர்கள், தங்கள் உரிமைகளைத் திரும்பப்பெற விரும்பினார்கள். ஆகவே தங்கள் எல்லோருக்கும் ஒரே விரோதியான ஆங்கிலேயர்களை தேசத்திலிருந்து வெளியேற்றிவிட விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவர்களுக்காகத் தங்கள் உயிர்களைக் கொடுக்கவிருக்கும் சிப்பாய்களுக்கும், சதுரங்கத்தின் காய்களுக்கும், அவர்களைப் பொறுத்த வரையில் எவ்வித வேற்றுமையும் கிடையாது. சிப்பாய்கள் தங்கள் மதம் போய்விடுமென்ற பயத்திலே கொதித்தெழுந்தார்கள். ஒரு வேளை தோட்டாக்களைப் பல்லினால் கடிக்க வேண்டிய அவசியத்திலிருந்து விடுதலை கிடைத்திருந்தால், அவர்கள் நிரந்தரமாகக் கம்பெனிக்கு ஜே போட்டுக் கொண்டிருக்கக் கூடும். ஆங்கிலேயர்களுக்காக, ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஹிந்து முஸ்லீம்களுக்கிடையே உள்ள அகழி, அது சிறிதும் குறையவில்லை. இந்தக் கலகம் ஜெயித்திருந்தால், மதத்தின் பெயரால் கொதித்தெழுந்த எழுத்தறிவற்ற இந்தச்சிப்பாய்கள், அல்லாவினுடையவும் பகவானுடையவும் கிருபைக்குப் பாத்திரமாவதற்காக, இன்னும் அதிகக் கடினமான மத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த மத நம்பிக்கையைத் தவிர, அவர்கள் மனத்திலே வேறு ஏதாவது ஒரு தூண்டுதல் இருந்ததென்றால், அது கிராமங்களையும் நகரங்களையும் வெள்ளையடிக்கலாமென்பது தான். கலகம் செய்த சிப்பாய்களிலே மிகக் கொஞ்சம் பேர்கள்தான் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள். அதுவும் ஒரு சில இடங்களில்தான் என்றாலும், இதைப் பற்றி எழுந்த கூச்சல், எல்லாக்
கிராமங்களையும் பயத்திலே ஆழ்த்தி விட்டது. தேசத்தை விடுவிப்பதற்காக கிளம்பியுள்ள சேனையைப் பற்றி இந்த மாதிரியான வதந்தி நன்மை பயக்காது. இதை அறிந்ததும் மங்கள சிங்கின் நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அவன் சேத்சிங்கின் சிம்மாசனத்தைப் பெறுவதற்காகப் போராட வரவில்லை. சமத்துவம் சுதந்திரம்-சகோதரத்துவம் நிறைந்த ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகப் போராட வந்திருக்கிறான். ஆங்கில முதலாளிகளின் ஆட்சிக்கு அதில் இடமில்லாதது போலவே, ஹிந்து-முஸ்லீம் வேற்றுமைக்கும் ஜாதிப் பிரிவினைக்கும் அதில் இடமிருக்காது. இந்தக் கிணற்றுத் தவளைத் தன்மையைக் காப்பாற்றுவதற்காக அவன் வரவில்லை; ஜாதிச் சுவர்களை உடைத்து இந்தியாவை உலகத்தோடு இணைப்பதற்காக வந்திருக்கிறான். ஆங்கில முதலாளிகளின் சுரண்டலை ஒழித்து இந்தியப் பொது ஜனங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுப்பதோடு வேர்கள் உலகத்தின் மற்ற நாட்டு மக்களோடு, சகோதர பாவத்துடன் இணைந்து நின்று, ஒரு புதிய உலகத்தைத் தோற்றுவிக்க வேண்டுமென்பதற்காக வந்திருக்கிறான்! தோட்டாவிலே கொழுப்பு தடவியுள்ள பொய்க் கதைப் பிரசாரத்தையும் அதன்மூலம் இந்தியாவிலே மறுபடியும் மதங்கள் வேரூன்றிக் கொள்வதையும் அவன் விரும்பவில்லை. நானாவும், மற்ற கலகத் தலைவர்களும் மேல் நாட்டிலிருந்து வரும் உயர்ந்த மதுக்களைப் பருகுபவர்கள் தான். சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 324, புத்தகங்கள், தங்கள், பக்கம், அவன், வந்திருக்கிறான், இந்தக், வால்காவிலிருந்து, தெரிந்து, கங்கை, வரவில்லை, போராட, முதலாளிகளின், மற்ற, அதில், பற்றி, ஆங்கில, தான், ஒருவர், பயத்திலே, என்பதைத், ஹிந்து, சிறந்த, கிராமங்களையும், கலகம், கலகத்