வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 314
மங்களசிங்
காலம் : கி.பி. 1857
அவர்கள் இருவரும் இன்று டோவரைப் (Dover) பார்க்கச் சென்றார்கள். அங்கே, அரசனின் விரோதிகள் ஆயுள் முழுவதும் அடைத்து வைக்கப்பட்ட கொட்டடிகளைப் பார்த்தார்கள். அரசன் உலகத்தில் கடவுளின் குழந்தை; மக்களின் வாழ்வும்-சாவும் அவன் கையில் தான் இருக்கிறதென்பதை ஞாபகப்படுத்தும் சின்னங்களான கோடரி முதலிய ஆயுதங்களைப் பார்த்தார்கள். இவைகள் எல்லாவற்றையும் விட அவர்கள் மனதைக் கவர்ந்தது இங்கிலாந்தின் அரசர்களுடையவும் ராணிகளுடையவும் தலைகள் துண்டிக்கப்பட்ட இடமும் துண்டித்த ஆயுதமும்தான்.
ஆனீ ரஸல் இன்றும் அவனுடைய கையோடு தனது மிருதுவான கையைக் கோத்துக் கொண்டிருந்தாள். அந்தக் கரங்களின் மென்மை இன்று அவன் உடலிலே ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. பதினொரு வருடங்களுக்கு முன்பே (1846) அந்த மகான் விஞ்ஞானி (மைக்கேல்
பாரடே) யால் கண்டுபிடிக்கப்பட்ட மின்சார இயந்திரத்திலிருந்து தோன்றும் மின்சார சக்தியைப் போன்ற ஒரு சக்தி, அவள் உடம்பிலிருந்து தோன்றி அவன் உடம்பிலே ஓடுவதாக உணர்ந்தான்.
“ஆனி! நீ மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பாட்டரியா?”
“ஏன் அப்படிக் கேட்கிறாய் மங்கி?”
“எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. பதினாறு வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் மண்ணிலே காலெடுத்து வைத்தபோது இருளிலே இருந்து ஒளி நிறைந்த பிரதேசத்திற்கு வந்ததுபோல் உணர்ந்தேன். நான் இங்கே ஒரு பரந்த உலகத்தை-அகல நீலத்தில் அல்ல எதிர் காலத்தின் ஆழத்திலே மிகுந்த தூரம் முன்னேறிச் செல்லும் ஒரு பரந்த உலகத்தைப் பார்த்தேன். பீட்ரூட் கிழங்கிலிருந்து சீனி (1808) நீராவிக்கப்பல் (1819) ரயில் (1825) தந்தி (1833) நெருப்புப்பெட்டி (1838) போட்டோ (1839) மின்சார ஒளி (1844) இவைகளையெல்லாம் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் கேம்பிரிட்ஜில் இவைகளைப் பற்றியெல்லாம் படிக்கவும் ராசயானசாலையிலே ஆராய்ந்து பார்க்கவும் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது இந்த உலகத்தின் எதிர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 314, புத்தகங்கள், பக்கம், அவன், வால்காவிலிருந்து, மின்சார, கங்கை, நான், எதிர், பரந்த, பார்த்தார்கள், சிறந்த, இன்று, இங்கிலாந்தின், வருடங்களுக்கு