வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 309
“ஆனால், ஒப்புக் கொள்வதினாலும்-விரும்புவதினாலும் இது நடந்துவிடாது தின்கௌடி! இதற்காகப் பிரான்ஸைப் போல ஆயிரக்கணக்கான பேர்களைப் பலிகொடுக்க வேண்டும். அதுவும் மௌனமாகச் சாவதிலே பலன் இல்லை. இந்தியச் சிப்பாய்கள், ஆங்கிலேயர்களுக்காக இப்பொழுதுங்கூட லட்சக்கணக்கில் பலியாகிறார்கள். இனி அவர்கள் தங்களுக்காகப் பலியாக வேண்டும். அதுவும் கேட்டுப் புரிந்து கொண்டு.”
“கேட்டுப் புரிந்து கொண்டா?”
“கேட்டுப் புரிந்து கொண்டு என்பதன் கருத்து, இந்தியர்கள் உலகத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான். விஞ்ஞானம்,
இன்று மனிதர்களின் கைகளுக்குப் பலத்த சக்தியைக் கொடுத்திருக்கிறது; இந்த விஞ்ஞான அறிவினாலேயே, மனிதர்கள் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் கண்டுபிடித்துத் தங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஞ்ஞான அறிவுதான் உங்கள் நகரங்களைப் பாழாக்கி இங்கிலாந்திலே புதிய புதிய யந்திரத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இந்த விஞ்ஞான அறிவை நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.”
“அப்புறம்?”
“இந்தியாவிலுள்ள தீண்டாமை, ஜாதிப்பிரிவினைகள், ஹிந்து முஸ்லீம் வேற்றுமை யாவும் ஒழிய வேண்டும். நாங்கள் சாப்பிடுவதிலே வேற்றுமையோ, தீண்டாமையோ பாராட்டுகிறோமா?”
“இல்லை.”
“ஆங்கிலேயர்களுக்குள்ளே ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையைத் தவிர, வேறு எந்த ஜாதி வேற்றுமையாவது இருக்கிறதா?”
“இல்லை.”
“உங்கள் சாதி வழக்கத்தை நிறுத்திவிட வேண்டும். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்களை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதைக் கடவுள் மன்னித்து விடுவாரென்று நீ நம்புகிறாயா?”
கோல்மேனும், தின்கௌடியும் கல்கத்தாவை அடைந்து பிரிந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 309, புத்தகங்கள், வேண்டும், புரிந்து, பக்கம், விஞ்ஞான, முடியும், வால்காவிலிருந்து, கொண்டு, கங்கை, வளர்த்துக், “இல்லை, கொள்ள, அறிவை, ஆயிரக்கணக்கான, சிறந்த, பலன், உங்கள், அதுவும், “கேட்டுப்