வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 299
“பண்டித்! ஏனென்று கேட்பார் யாருமில்லை என்று சொல்கிறாய். யார் கேட்பார்கள்? இங்கே எல்லோருமே கொள்ளைக்காரர்கள். ராஜா யாருமே இல்லை. அன்னியன் சொத்து கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடிக்க முடிந்தவர்கள் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்பதுதான் இப்பொழுது நடைபெறுகிறது. சுபேதார் (கலெக்டர்) சாஹிப்பின் ஆபிசிலே, எனது மாமன் மகளுடைய மாப்பிள்ளை வேலை பார்க்கிறான். அவனுக்கு அநேக ரகசியங்கள்
தெரியும். இங்கே யாரும் ராஜா இல்லையாம். நூறு இருநூறு பரங்கிக் கொள்ளைக்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்களாம். அப்படி ஒன்று சேர்ந்திருப்பதற்குத்தான் கும்பினி என்று பெயராம்.”
ரேக்கா-“முன்ஷி சரியாகச் சொல்கிறார். இதுவரை நாம் கும்பினிப் பகதூர் கும்பினிப் பகதூர் என்று கேட்டுக் கேட்டு, கும்பினி என்று யாரோ ஒரு ராஜா இருப்பதாகக் கருதிக் கொண்டோம். இப்பொழுதுதான் உண்மை புலப்படுகிறது.”
மௌலா-“அதனால்தான் எங்கு பார்த்தாலும் கொள்ளையோ கொள்ளையாய் இருக்கிறது. நியாய அநியாயத்தைக் கேட்பாரே இல்லை. இந்த ராம்பூரின் முன்ஷிக்கு முந்திய தலைமுறைகளிலே, நமது தயாள்பூர் கிராமத்தோடு ஏதாவது தொடர்பிருந்ததா?”
சோபரன்-“ராம்பூர் முன்ஷி நமது கிராமத்திற்கு எப்படி எஜமானன் ஆனான் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. டெல்லி பாதுஷாவோடு கும்பினி சண்டை தொடுத்தது...”
முன்ஷி-“டெல்லியோடல்ல, சோபரன்! மூர்ஷிதா பாத் நவாப்போடு சண்டை போட்டது. டெல்லி சிம்மாசனத்திடமிருந்து, மூர்ஷிதாபாத் ஏற்கனவே நம்முடைய தேசத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தது.”
சோபரன்-எங்களுக்கு இதெல்லாம் ஞாபகமிருப்பதில்லை முன்ஷிஜி! எங்களுக்கு டெல்லிதான் தெரியும். நல்லது, மூர்ஷிதாபாத்திடம் ஆட்சி வந்தபொழுதும் ஓர் அரசர்தானே இருந்தார். நமக்கு யார் வந்தாலும் போனாலும் வரி செலுத்துவதோடு தீர்ந்தது. ஆனால், இப்பொழுது, எத்தனை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 299, புத்தகங்கள், பக்கம், ராஜா, கும்பினி, முன்ஷி, சோபரன், கங்கை, வால்காவிலிருந்து, எங்களுக்கு, கும்பினிப், பகதூர், தெரியும், சண்டை, நமது, டெல்லி, கொள்ளைக்காரர்கள், சம்பாஷணையில், அவன், சிறந்த, தயாளபூர், யார், இல்லை, இங்கே, இப்பொழுது