வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 298
மௌலா-“ஏழு தலைமுறைகளாக, காடுகளை வெட்டி நாம் நிலத்தைப் பண்படுத்தினோம்.”
சோபரன்-“மௌலு! புலி வயல் இருக்கிறதல்லவா? அந்த இடம் ஒரு பெரிய காடாயிருந்தது. அந்த இடத்தில் தான் என்னுடைய முப்பாட்டனாரை ஒரு புலி தூக்கிக் கொண்டு போய்விட்டதாம். அது முதல் அந்த இடத்திற்கு புலிவயல் என்று பெயர் ஏற்பட்டதாம். இப்படி நாம் உயிரைக் கொடுத்து, நிலத்தையும் வளம் செய்திருக்கிறோம்.”
ரேக்கா-“ஓ, போலா பண்டித! உனக்குச் சத்தியயுகத்தின் சமாச்சாரம் கூடத் தெரியுமா! இந்த மாதிரிப் பிரஜைகளின் மீது கொடுமை எப்பொழுதாவது செய்யப்பட்டிருக்கிறதா?”
மௌலா-“நிலத்தை வளப்படுத்துகிறவர்கள் நாம்-உழுது
விதைப்பவர்கள்நாம். ஆனால் பண்டித்; கிராமத்திற்குச் சொந்தக்காரர் ராம்பூரிலிருக்கும் முன்ஷிஜி.”
போலா-“அதர்மம். அப்பா அதர்மம், இந்தக் கும்பினி கொடுமை செய்வதில் இராவணனையும் கம்ஸனையும் கூட ஜெயித்து விட்டது. அரசன் விவசாயிகளிடமிருந்து பத்திலொரு பங்கு வரி வாங்க வேண்டுமென்று நமது தர்ம சாஸ்திரங்களிலே எழுதப்பட்டிருக்கிறது.”
மௌலா-“பண்டித். இந்த ராம்பூர் முன்ஷியை நமது எஜமானனாக-நமது கிராமத்தின் ஜமீன்தாராக ஏன் ஆக்கினார்களென்று எனக்குப் புரியவில்லை.”
போலா-“எல்லாம் தலைகீழ்ப் பாடம்தான் மௌலு, முன்னால் ஜனங்களுக்கு மேலே ஓர் அரசன் இருந்தான். விவசாயிகளுக்கு, அந்த ஒரு அரசனைப் பற்றித்தான் தெரியும். அவனும் வெகு தூரத்திலிருக்கும் அவனுடைய தலைநகரிலே வசிப்பான். பத்திலொரு பங்கு வரி வாங்கும் அளவுக்குத்தான். அவனுக்கும் விவசாயிக்கும் தொடர்பு. ஆனால், இப்பொழுது நிலம் விளையுமோ விளையாதோ நமது சதையை விற்றாவது குழந்தை குட்டிகளை விற்றாவது, ஜமீன்தாருக்கு வாரம் செலுத்தியாக வேண்டும்.”
ரேக்கா-“அந்த வாரத்திற்கும் அளவு தெரியவில்லை. பண்டித்! வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த மாதிரிப் பயங்கர ஆட்சி ஏனென்று கேட்பார் யாருமில்லை.”
முன்ஷி சதாசுக்லால் பட்டுவாரி (பட்டுவாரி-கிராமக் கணக்கன்) ஹரிஹர க்ஷேத்திரத்தில் ஸ்நானம் செய்துவிட்டு மலிவாய்க் கிடைத்தால் ஒரு பசுவும்
வாங்க வேண்டுமென்று வந்திருந்தான். ஆனால் இந்த வருடக் கிராக்கியைப் பார்த்து, அவன் தொடை நடுக்கமெடுத்துவிட்டது. அவனுடைய
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 298, புத்தகங்கள், அந்த, நமது, நாம், பக்கம், போலா, மௌலா, வால்காவிலிருந்து, ரேக்கா, கங்கை, வேண்டுமென்று, வாங்க, விற்றாவது, அவனுடைய, பங்கு, பட்டுவாரி, மாதிரிப், புலி, சிறந்த, கொடுமை, பண்டித், அரசன், பத்திலொரு