வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 300
ரேக்கா-“சோபரன்! நமக்குத் தெரிய இரண்டு ராஜாக்கள் இருக்கிறார்கள். ஒன்று கும்பினி ராஜா! மற்றொன்று ராம்பூரின் முன்ஷி. திரிகை வழக்கம் போல் மேல்பாகம் மட்டும் சுழன்று அரைத்தால், ஒன்றிரண்டு மணிகளாவது தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அடிப்பாகமும் சுற்றத் தொடங்கிவிட்டால் தப்புவது ஏது? முன்ஷிஜி நீயே சொல், நாங்கள் படிக்காத பட்டிக்காட்டு ஆசாமிகள்.”
முன்ஷி-“ரேக்கா, நீ சரியாகச் சொல்கிறாய். ஜமீன்தார் திரிகையின் அடிப்பாகம்தான். அவர், ராஜாவைவிட எந்த விஷயத்திலும் குறைந்தவரல்ல.”
ரேக்கா-“குறைவென்ன, அதிகமென்று சொல் முன்ஷிஜி! கிராமப் பஞ்சாயத்தை இப்பொழுது சீந்துவாரே இல்லை. வழக்கம் போல் நாம் ஐந்து பஞ்சாயத்தார்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறோம். ஆனால் அவர்கள், எந்த வேலையிலாவது தலையிட முடிகிறதா? எல்லாக் காரியங்களையும், ஜமீன்தாரும், அவரது நிர்வாகிகளுமே செய்து வருகிறார்கள். இந்த ஜமீன்தாரி வந்து பதினைந்து வருடங்கள் கூட ஆகவில்லை. இதற்கு முன்னால் எப்பொழுதாவது புருஷனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டதற்காக எருமையை ஏலம் போட்ட கதையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”
சோபரன்-“அந்தக் காலத்தில், எல்லாம் கிராமப் பஞ்சாயத்தின் கையிலே இருந்தது. எந்த வீடும் பாழடைந்து விடாமல், பஞ்சாயத்து கவனித்துக் கொண்டது. கொலை - பழியைக் கூட, அந்தக் காலத்தில் பஞ்சாயத்து சமாதான முறையில் தீர்த்து வைத்துவிடும். ரேக்கா, நம்முடைய கண்மாய்க் கரைகளை நீ பார்க்கவில்லையா? பஞ்சாயத்து இருந்தால், அது இந்த நிலைமையில் இருக்குமா?”
ரேக்கா - “இந்த மாதிரி இருக்காது சோபரன்! தங்கள் குழந்தை குட்டிகள் வாயிலே யார் மண்ணைப் போடுவார்கள்? மழை அதிகமாகப் பெய்யும்பொழுது கரை உடைத்துக் கொள்ளாமல் மழைத் தண்ணீர் வெளியேறுவதற்கு மடைகள் சுத்தம் செய்யப்படவுமில்லை! மழை குறைவாகப் பெய்யும் பொழுது, அதைத் தடுத்து நிறுத்தி உபயோகப்படும்படி செய்வதற்குச் சரியான கரைகளும் இல்லை.”
முன்ஷி - “நமது பஞ்சாயத்துக்களை அழித்துவிட்டு இந்த வேலையை ஜமீன்தாரிடம் ஒப்படைத்திருக்கிறது கும்பினி.”
ரேக்கா - “ஜமீன்தார்கள் செய்வதைத்தான் இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
முன்ஷி - “நானும் ஜமீன்தாரின் உப்பைத் தின்பவன் தான் ரேக்கா! மஸ்ரக் ஜமீன்தாருடைய கணக்குப்பிள்ளை நான். ஆயினும், இது அக்கிரமமாக வந்த சொத்துத்தான். அநியாயச் சொத்தைச் சாப்பிடுபவர்கள் உருப்படுவதில்லை. என்னையே பாருங்கள்; எனக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. எல்லோரும் காளைப் பருவத்திலே மாண்டு போனார்கள். இப்பொழுது, எள்ளும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 300, ரேக்கா, புத்தகங்கள், முன்ஷி, இப்பொழுது, வால்காவிலிருந்து, எந்த, கங்கை, பஞ்சாயத்து, பக்கம், இல்லை, சோபரன், காலத்தில், கிராமப், நாம், போல், ராஜாக்கள், சிறந்த, கும்பினி, வழக்கம், முன்ஷிஜி, சொல்