வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 297
ரேக்கா பகத்
காலம் : கி.பி.1800
கார்த்திகை மாதத்துப் பௌர்ணமி. நாராயணி ஸ்நானத்திற்காகவும் ஹரிஹரநாதர் தரிசனத்திற்காகவும், கூட்டம் ஏராளமாகக் கூடிக் கொண்டிருந்தது.
தொலை தூரங்களிலிருந்து கிராமத்து ஜனங்கள்-ஆண்களும், பெண்களும், தாங்கள் பிரயாசையோடு சேர்த்து வைத்திருந்த காசுகளையும், அரிசி-மாவுகளையும் எடுத்துக் கொண்டு ஹரிஹரநாதரைத் தரிசிக்க வந்து சேர்ந்தனர். அங்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த காளைகள் குதிரைகள், சில யானைகளைப் பார்த்து எதிர்காலத்திலே இது உலகத்தின் பெரிய திருவிழாவாக ஆகக்கூடும் என்று அப்பொழுது யார் கற்பனை செய்திருக்க முடியும்?
ரேக்கா பகத்தும் அவனது நான்கு தோழர்களும் அங்கொரு மாமரத்தின் நிழலிலே கம்பளியை விரித்து உட்கார்ந்து கொண்டு, மேல் துண்டிலே முடிந்து வந்திருந்த உப்புக் கலந்த மாவை, பச்சை மிளகாயையும் முள்ளங்கியையும் கடித்துக் கொண்டு சுவாரசியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரேக்காவின் எருமை இன்று விற்றுப் போய் விட்டது. அவன் வேட்டியின் மூலையிலே முடிந்து வைத்திருந்த அந்த இருபது ரூபாய்களையும், இப்பொழுதும்கூட ஒருமுறை பார்த்துக் கொண்டான். திருவிழாக் காலங்களிலே மந்திரசக்தியின் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடும் திருடர்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான். ரேக்காவின் கைகள் மறுபடியும் ஒருமுறை முடிச்சைத் தடவிப் பார்த்தன. நம்பிக்கையோடு பேசத் தொடங்கினான்.
“என்னுடைய எருமை விற்றுப் போய்விட்டது. ஏ, மௌலு! மூன்று மாதங்களாகத் தீவனம், தண்ணீர் வைத்துத் தயார் செய்தேன். இருபது ரூபாய்கள் இந்த எருமைக்குக் குறைவான விலையல்ல. ஆயினும் இப்பொழுதெல்லாம் லட்சுமி பார்த்துக் கொண்டிருக்கும்போதே பறந்து
போய்விடுகிறாள்.”
மௌலா-“பறந்து போய் விடுகிறாள்! இப்பொழுது பணங் காசுக்கும் அதிக மதிப்பில்லாமல் போய்விட்டது. இந்தக் கும்பினியின் ராஜ்யத்தில், எந்தப் பொருளும் மலிவாயில்லை. நாம் மண்ணைத் தோண்டித் தோண்டி மடிந்து போகிறோம். ஒரு நாள் கூடக் குழந்தை குட்டிகளுக்கு வயிறு நிறையச் சாப்பிடக் கிடைக்கவில்லை.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 297, புத்தகங்கள், கொண்டு, கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், போய், அவன், பார்த்துக், போய்விட்டது, விற்றுப், ஒருமுறை, இருபது, முடிந்து, ரேக்கா, சிறந்த, வைத்திருந்த, எடுத்துக், ரேக்காவின், எருமை