வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 291
“எங்கே?”
“நம் இருவருடைய வீட்டிலும். அது மட்டுமல்ல மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி அவர்களுக்குங்கூட.”
“சக்கரவர்த்தி அவர்களுக்குமா?”
“ஆம்; ஏன், பயந்துவிட்டாயா?”
“இல்லை. நம் காதல், இன்றில்லாவிட்டால் நாளை வெளிப்பட்டுத் தானே ஆகவேண்டும். ஆனால், இப்பொழுது எப்படி வெளிப்பட்டது?”
“அவ்வளவு விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் முதலிலே மாமாவும் மாமியும் இதை வரவேற்றார்களாம். பிறகு தந்தையும், பாதுஷா ஸலாமத்தும் வரவேற்றார்கள். முடிவிலே தாயாருங்கூட.”
“தாயாருங்கூடவா?”
“அம்மாவைப்பற்றி எல்லோரும் பயந்துகொண்டிருந்தார்கள். அவள் பழங்காலக் கருத்துக்களை உடையவள் என்பது உனக்குத் தெரியுமே?”
“ஆனால், எனது கன்னங்களில் அவள் முத்தமிட்ட ஈரம் இன்னும் காயவில்லை.”
“மற்றவர்களின் கருத்துத் தவறென்று ஆகிவிட்டது. அம்மாவிடம் தந்தையார் இந்த விஷயத்தைச் சொல்லிய பொழுது, அவள் மகிழ்ச்சியோடு வரவேற்றாளாம்.”
“ஆம்; அப்படியானால், நம் காதல் பூரணமாக வரவேற்கப்படுகிறது.”
“ஆம்; நம்மைச் சேர்ந்த எல்லா வீடுகளிலும். ஆனால், வெளிஉலகம் இதை ஏற்கத் தயாராய் இல்லை.”
“அந்த வெளி உலகத்தைப் பற்றி நீ கவலைப்படுகிறாயா கமல்?”
“முற்றிலும் இல்லை. ஆனால், வருங்கால உலகத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன். அவர்களுக்கு நாம் சரியான வழியையும் காட்டிச் செல்கிறோம்.”
“மன்னிக்குங்கூடத் தெரியும் போலிருக்கிறது, கமல்! நேற்றிரவு நான் வீட்டிற்குப் போனபொழுது அவள் வேடிக்கை செய்து கொண்டே, ‘ஏ நாத்தி, நாத்தி புருஷனை எங்கு தேடுவதென்று நான் தடுமாறிக் கொண்டு திரிந்தேன். இப்பொழுது ஒரே கல்லில் இரண்டு பறவையை அடித்தது, என் ஆசை எல்லாவழியிலும் பூர்த்தியாகிவிட்டது’ என்று கூறினாள். அவள் உன் பெயரை உச்சரிக்காவிட்டாலும், விஷயம் தெரிந்துதான் சொல்லியிருக்கிறாள் என்று தெரிகிறது.”
”அப்படியானால், உன் அண்ணாவிற்கும் விஷயம் தெரிந்து அவர் மன்னிக்குச் சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நமது காதலை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 291, அவள், புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, “ஆம், நான், விஷயம், கமல், நாத்தி, இப்பொழுது, சிறந்த, காதல், இல்லை, உலகத்தைப்