வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 290
“எங்கே பார்க்கலாம்?”
“நான் இவைகளை இந்தக் குட்டையிலே போடுகிறேன். அதில் பார்த்தால் இன்னும் அதிக அழகாக இருக்கும்.”
சுரையா, கண்களிலும் உதடுகளிலும் சிரிப்புப் பொங்கி வழிய, குட்டைக்குப் பக்கத்திலே போய் நின்றாள். கமலன் பானையிலிருந்த மீன்களை ஒவ்வொன்றாகக் குட்டையிலே விட்டான். ஸ்படிகம் போன்ற அந்த நீரிலே சிவப்பு பொன்னிற மீன்கள் வெகு அழகாகக் காட்சியளித்தன.
“இப்பொழுது சிறியதாயிருக்கின்றன சுரையா, எவ்வளவு பெருத்தாலும் அது ஆறு அங்குலத்திற்கு மேல் நீளாது” என்றான் கமல்.
“இப்பொழுது அழகாகவே இருக்கின்றன கமல்”
“இதோ பார் சுரையா! இது என்ன நிறம்.”
“ரோஸ்.”
“உன்னுடைய கன்னங்களைப் போல்.”
“குழந்தைப் பருவத்திலிருந்து நீ அப்படித்தான் சொல்லிக்
கொண்டிருக்கிறாய் கமல்!”
“அப்பொழுதும் அவைகள் அப்படியேதான் இருந்தன.”
“குழந்தைப் பருவத்தில் நீ எனக்கு இனியவனாய் இருந்தாய்.”
“ஆனால், இப்பொழுது?”
“இப்பொழுது ரொம்ப இனியவனாய் இருக்கிறாய்?”
“ரொம்பவும் கொஞ்சமும் ஏன்?”
“ஏனோ தெரியாது. உன்னுடைய குரலிலே ஒரு மாற்றம் ஏற்பட்ட பொழுது, உன்னுடைய உதடுகளுக்கு மேல் ரோமத்தின் மெல்லிய ரேகை தோன்றிய பொழுது எனது அன்பும் இன்னும் கொஞ்சம் ஆழத்தில் போய்ப் பதிந்து விட்டதாகத் தோன்றுகிறது.”
“ஆனால், அப்பொழுது முதல் நீ கமலனைத் தூரத்திலேயே தள்ளிவைக்க ஆரம்பித்தாய்?”
“தள்ளி வைக்கவா?”
“ஏனில்லை! முன்னைப் போல் நீ குதித்துக் கொண்டு வந்து என் கழுத்தைக் கட்டிக் கொள்கிறாயா? எனது கரங்களைப் பிடித்து ஒடிக்கிறாயா!”
“எல்லாக் குறைகளையும் என் மீதே சுமத்திக் கொண்டிராதே, வேறு ஏதாவது புதிய சமாச்சாரம் உண்டா?”
“புதிய சமாசாரம் இருக்கிறது சுரையா! நம்முடைய காதல் வெளிப்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 290, புத்தகங்கள், சுரையா, பக்கம், “இப்பொழுது, வால்காவிலிருந்து, கங்கை, “ஆனால், இனியவனாய், உன்னுடைய, எனது, “குழந்தைப், பொழுது, கமல், குட்டையிலே, இன்னும், மேல், சிறந்த, போல்