வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 292
“உன்னுடைய மாமியார் வீடு முழுவதும் உன்னுடைய காலடியிலே இருக்கிறது கமல்!.”
“நீ என்ன லேசா? அம்மாவையே உன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டாயே!”
“மாமியின் பூஜை-புனஸ்காரத்தைப் பார்த்து, நீங்கள் எல்லோரும் அப்படிக் கருதியிருக்கிறீர்கள். என்மீது அவளுக்கு எவ்வளவு பிரியம் இருக்கிற தென்பதைத் தெரிந்திருந்தால், இதில் நீங்கள் அவளைச் சந்தேகப்
பட்டிருக்கமாட்டீர்கள்.”
“அது தெரிந்துதான், அவள்மீது உபயோகிப்பதற்கு உன்னைக் கடைசி ஆயுதமாகத் தகப்பனார் தேர்ந்தெடுத்திருந்தாராம். ஆனால், கடைசி ஆயுதத்தை உபயோகிக்காமலேயே கோட்டை சுலபமாக விழுந்துவிட்டது. நம்முடைய கல்யாணம் விரைவில் நடைபெறப் போகிறது.”
“எங்கே?”
“பண்டிதர்களின் முன்னிலையிலோ, முல்லாக்கள் முன்னிலையிலோ அல்ல. இங்கே பாரதத்திலே ஒரு புதிய திரிவேணியைத் தோற்றுவித்து, அதன் மூலம் பலமான கோட்டையை எழுப்ப விரும்பும் நமது தேவ தூதர் முன்னிலையில்.”
“ஓ! குளம், குட்டைகள், நதி, கால்வாய்கள், யாவற்றையும் இணைத்து, ஒரு மகா சமுத்திரத்தைத் தோற்றுவிக்க முயலும் நமது பாதுஷா முன்னிலையிலா?”
“ஆம்; நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.”
“ஞாயிற்றுக்கிழமை!” என்று சொல்லிய சுரையாவின் கண்கள் நீரைக் கக்கின. கமலின் கண்களும் நீரால் நிறைந்துவிட்டன. அப்படியே அவளைத் தழுவிக் கொண்டு அவளது கண்களிலே முத்தமிட்டான். மறைந்திருந்து பார்க்கும் வேறு நான்கு கண்களும், இந்தக் காட்சியைக் கண்டு, இவர்களைப் போலவே, ஆனந்தக் கண்ணீர் பெருக்குகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.
4
வசந்த காலத்தின் சுகமான குளிர், மாலை நேரம்! கடலிலே மூழ்கும் சூரியனின் செங்கிரணங்களால் கடல் அலைகள் நெருப்புப் பற்றி எரிவதுபோல் காட்சியளிக்கின்றன. சமுத்திரக் கரையிலே மணல்மீது அமர்ந்திருக்கும் இரண்டு இளம் இதயங்கள், இந்த அழகுக் காட்சியிலே லயித்திருக்கின்றன. கடலிலே மூழ்கும் செங்கோளம் கடைசி எல்லையை அடைந்தபோது, அவர்கள் மௌனத்தைக் கலைத்துப் பேசத் தொடங்கினார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 292, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, கடைசி, கண்களும், நமது, மூழ்கும், கடலிலே, நீங்கள், சிறந்த, கொண்டு, முன்னிலையிலோ