வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 281
“கமல்! நீ நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கிறாயா?”
“யுகக் கணக்காக என்று தோன்றுகிறது. பிர்மா சிருஷ்டித் தொழிலைத்
தொடங்கியது முதல், இந்தப் பூமி இத்தனை இறுகிப் போயிருக்காமல் ‘கொள கொளப்பாக’ யிருந்ததே தாவரங்களையும், உயிர்ப் பிராணிகளையும் தாங்கிக் கொண்டு அப்பொழுதிருந்தே காத்துக் கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது.”
“போகட்டும் கமல்! எப்பொழுது பார்த்தாலும் நீ கவிதை செய்து கொண்டேயிருக்கிறாய்.”
“சுரையா உன் வாக்கு உண்மையானால் எவ்வளவோ நல்லது. ஆனால், என் அதிர்ஷ்டத்திலேயே கவிதாதேவி குடியேறவில்லை.”
“சுரையா மற்ற எந்தப் பெண்ணையும் தன்னோடு வைத்துக்கொள்ள விரும்ப மாட்டாள்.”
“என் மனமும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் மனம் லயித்து நீ எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாய் சுரையா?”
“ரொம்ப தூரத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்; ரொம்பதூரம்! சமுத்திரம் எவ்வளவு தூரம் இருக்கும் கமல்?”
“நமக்கு மிகச் சமீபத்திலிருப்பது சூரத். அதுவும் ஒரு மாதப் பயணம்.”
“இந்தத் தண்ணீர் எல்லாம் எங்கே போகின்றன?”
“வங்காளத்தை நோக்கி, அது இன்னும் அதிகத் தூரம். இரண்டு மாதப் பயணம் இருக்கலாம்.”
“பாவம், இந்த மண் கலந்த தண்ணீர் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டுமா? நீ சமுத்திரத்தைப் பார்த்திருக்கிறாயா கமல்?”
“தந்தையாரோடுகூட ஒரிஸாவிற்குப் போயிருந்தேன். அப்பொழுது பார்த்தேன்.”
“எப்படியிருக்கும் கமல்?”
“எதிரே ஆகாயம் வரை பரந்திருக்கும் கரிய நிறம். கரையிலே அலைமோதும் பெரிய பள்ளமாகக் காட்சியளிக்கும்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 281, புத்தகங்கள், கமல், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, தூரம், “சுரையா, பயணம், தண்ணீர், தோன்றுகிறது, மாதப், இரண்டு, எங்கோ, சிறந்த, அவள், அவளுடைய, பெரிய, கொண்டு