வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 282
“இல்லை அன்பே! அங்கே ஒரே ஒரு நிறந்தான் உண்டு. அது இருண்ட நீலம் அல்லது கறுப்பு.”
“நீ காட்ட விரும்பினால், நான் என்றாவது ஒருநாள் சமுத்திரம் போய்ப் பார்ப்பேன்.”
“இந்தத் தண்ணீரோடு கூடவே புறப்படத் தயாராகயிருக்கிறேன். உன் உத்தரவுதான் வேண்டும் அன்பே!”
சுரையா, கமலனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். ஈரம் படிந்த இருவரது முகமும் ஒன்றோடொன்று உரசிற்று. கமலனின் ஆவல் நிறைந்த கண்களைப் பார்த்துக்கொண்டே சுரையா.
“நாம் சமுத்திரத்தைப் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தண்ணீரோடல்ல.”
“இந்த மண் நிறத் தண்ணீரோடில்லியா, அன்பே?”
“மண் நிறம் என்று சொல்லாதே கமல்! இது ஆகாயத்திலிருந்து
விழுந்தபோது, இப்படி மண் கலந்த அழுக்காகவா இருந்தது?”
“இல்லை. அந்தச் சமயத்தில் இதனுடைய பரிசுத்தம், சூரியனையும் சந்திரனையும் விட அதிகமாயிருந்தது. உன்னுடைய சுருட்டை மயிர்க் கற்றைகளை, இவைகள் எவ்வளவு பிரகாசிக்கச் செய்கின்றன? பால் நிலவு போன்ற உனது வெண்ணிறக் கன்னங்களை இந்த நீர்த்துளிகள் எவ்வளவு கவர்ச்சியுடையதாய் ஆக்கிவிட்டன! ஆகாயத்திலிருந்து நேராக எங்கெல்லாம் விழுந்ததோ, அங்கெல்லாம் உனது அழகை அதிகரிக்கச் செய்கின்றன.”
“ஆம், இந்த மண்நிறம் இதற்கு இயற்கையானதல்ல, அது கூட்டுறவால் ஏற்பட்டது. அந்தக் கூட்டுறவுதான் இந்த நீர் கடலில் கலப்பதையும் பல சமயங்களில் தடுக்கிறது. நேராகக் கடலிலே விழும் மழைத் துளிகளுக்கு இந்த மண் நிறம் உண்டா, கமல்?”
“இல்லை அன்பே!”
“ஆகையால், நான் இந்த மண் நிறத்தைக் குறை சொல்ல விரும்பவில்லை. அதற்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்றே கருதுகிறேன். உன்னுடைய கருத்தென்ன கமல்?”
“சுரையா! எனது மனத்திலுள்ள கருத்துக்களைத்தான் உனது உதடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.”
2
ஆகாயத்தின் நீலநிறம், ஆழமான தாமரைக் குளத்தின் நீரை இன்னும் அதிக நீலம் ஆக்கிக் கொண்டிருந்தது. அந்த நீல நிறத் தண்ணீரின் பகைப்
புலனிலே குளத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த பளிங்குக் கல் படிக்கட்டுகளின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 282, புத்தகங்கள், அன்பே, கமல், வால்காவிலிருந்து, பக்கம், கங்கை, உனது, “இல்லை, நிறத், நிறம், உன்னுடைய, செய்கின்றன, எவ்வளவு, கமலனின், ஆகாயத்திலிருந்து, நான், தண்ணீரின், “இந்தத், சிறந்த, அந்தச், நீலம், வேண்டும், போய்ப், சுரையா