வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 266
“ஹிந்துக்கள் இஸ்லாத்தை அவமானப்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுடைய தைரியம் இன்னும் அதிகப்படக்கூடும். இந்த அவமரியாதைகள் நடக்காதபடி தாங்கள் தடுக்க வேண்டும்.”
“அவமானமா? என்ன, பரிசுத்த குரானை காலிலா போட்டு மிதிக்கிறார்கள்?”
“இல்லை: அவ்வளவு தைரியம் எங்கிருந்து வரும்?”
“மசூதிகளின் புனிதத்தன்மையைக் கெடுக்கிறார்களா?”
“அது நடக்க முடியாது.”
“கருணை நிறைந்த கடவுளைப் பகிரங்கமாகத் திட்டுகிறார்களா?”
”இல்லை. ஜஹாம்பனாக், நமது ஸுபியா*க்களோடு பழகியவர்கள் நபிகள் நாயகத்தையும் ஒரு மகரிஷியாக ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் நமது
கண் முன்னாலேயே பல தெய்வங்களை வணங்கி, விக்கிரக ஆராதனை செய்கிறார்கள்.”
“அவர்களைக் ‘காபிர்’ (நாஸ்திகன்) என்று நீங்கள் கருதும் பொழுது, அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக விக்கிரஹ ஆராதனை செய்வதைப் பற்றி நீங்கள் எப்படிக் குறை சொல்ல முடியும்? என் சிறிய தந்தை ஜலால்உதீன் என்னைப் போல் இந்த நாட்டின் நிரந்தரவாசியாக ஆகிவிடவேண்டுமா? அல்லது இந்நாட்டு மக்கள் எல்லோரும் முஸ்லீம்களாக ஆகும்வரை இந்த நாட்டிலே தற்காலிகமாகத் தங்கி இருந்து ஆட்சி செய்யும் அரசனாகவே இருக்க வேண்டுமா என்பதைப் பற்றி முடிவு செய்யவில்லை. ஆயினும், உங்களைப் போலக் கேள்வி கேட்ட ஒருவருக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?”
“தெரியாது அரசே!”
“அவர், ‘முட்டாளே, நாள்தோறும் ஹிந்துக்கள் சங்கை முழங்கிக் கொண்டும், மேளம் கொட்டிக் கொண்டும் என் மாளிகைக்கு முன்னாலேயே விக்கிரஹ ஆராதனைகள் செய்வதற்காக யமுனைக் கரைக்குச் செல்வதை நீ பார்க்கவில்லையா? அவர்கள், என் கண் முன்னாலேயே தங்கள் பூஜைகளைச் செய்கிறார்கள். என்னுடைய ஆட்சி சக்தியை அலட்சியப்படுத்துகிறார்கள். எனது இஸ்லாத்தின் விரோதிகள் என்னுடைய தலைநகரிலேயே என் கண் முன்னாலேயே சுகபோகத்தோடும் செல்வச்செழிப்போடும் வாழ்கிறார்கள். சுகவாழ்வு செல்வப்பெருக்கின் காரணமாக, முஸல்மான்களோடு சம அந்தஸ்தில்
தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களின் இந்த போகச் செருக்கையும் தர்ம
___________________________________________________
*ஸு பி-முஸ்லீம் மதத்தின் ஒரு கிளை; தாராளத்தன்மை உடையது. பிற மதத்தினரையும் சகித்துச் சமமாகக் கருதும் கொள்கை உடையது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 266, புத்தகங்கள், முன்னாலேயே, கங்கை, வால்காவிலிருந்து, பக்கம், இஸ்லாத்தின், பற்றி, விக்கிரஹ, கொண்டும், உடையது, என்னுடைய, கருதும், ஆட்சி, ஆராதனை, முஸ்லீம், சிறந்த, தைரியம், என்ன, செய்கிறார்கள், நமது, நீங்கள்