வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 265
“கிராமத் தலைவர்கள் முடிந்தால் அவர்கள் விரும்புகிறபடி செய்யப்படும். ஆனால், கிராமத்தில் விவசாயிகள் அதிகமா? தலைவர்கள் அதிகமா?”
“விவசாயிகள் தான். நூற்றில் ஒருவர் கூட நிர்வாகிகளாயிருக்க மாட்டார்கள்!”
“அந்த நூறு விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சி ஒருவன் குதிரைச் சவாரி செய்யவும், பட்டுடை உடுத்தவும் செய்கிறான். இதை நாம் தடுத்து விவசாயிகளின் வாழ்க்கையை உயர்வுடையதாகச் செய்வதின் மூலம் நூற்றுக் கணக்கான விவசாயிகளை அரசாங்கத்திற்கு நம்பிக்கை உள்ளவர்களாகச் செய்கிறோம். ஒருவனைக் கோபம் அடையச் செய்வதின் மூலம்,
நூற்றுக்கணக்கானவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியுமானால் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கையை உயர்த்த முடியுமானால், அது எவ்வளவோ நல்லதல்லவோ?”
“நிச்சயமாக ஜஹாம்பனாக்! இப்பொழுது எனக்குச் சிறிது கூடச் சந்தேகமில்லை. பாரதத்தின் முஸ்லீம் அரசர்களுள் தாங்கள் முதன் முதலாக ஒரு புதிய காரியத்தைச் செய்யப் போகிறீர்கள். ஆயினும், அதில் வெற்றியடைவீர்கள். இதன் மூலம் நாம் கிராமத்தின் மேல் வகுப்பாராகிய ஒரு சிலருடைய பகையைத்தான் பெறுவோம்.”
“கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கும் ஒரு சில மேல் வகுப்பாரின் பகைமையைப் பற்றிப் பரவாயில்லை. இப்பொழுது சில நாள் தங்கும் தற்காலிகக் குடிசையல்ல! ஆட்சியின் உறுதியான மாளிகை கட்டுவதற்கு நாம் அஸ்திவாரம் போட வேண்டும்.”
ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்த முல்லா தனது தாடியைத் தடவிக் கொண்டே, “அரசர்க்கு அரசே, கிராமத்தின் நிர்வாகிகளின் நலனை விட ஏழை விவசாயி மக்களின் நலனிலே கவனம் செலுத்துவதுதான் அரசாங்கத்திற்கு அதிக நன்மை பயக்கக்கூடியது என்று நானும் கருதுகிறேன். நாம் சிறு நகரங்களில் வசிக்கும் நெசவாளர்களைக் கொஞ்சம் கவனித்தோம். அவர்களின் பஞ்சாயத்துப் பலப்படுவதற்கும், அவர்கள் வியாபாரிகள், லேவாதேவிக்காரர்களின் பிடியிலிருந்து தப்புவதற்கும் உதவி செய்தோம். கிராமத் தலைவர்கள், அவர்களை ஊழியத்திற்கு வேலை செய்யும்படி
செய்துவந்ததைத் தடுத்தோம். இவைகளின் பலனாக துணி நெசவாளர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தின் நிழலிலே சரண் புகுந்து விட்டார்கள்.”
“இப்பொழுது எது அரசாங்கத்திற்கு நல்லதாக இருக்கிறதோ, அதுவே இஸ்லாத்திற்கும் நன்மை பயப்பதாக இருக்கிறதென்பதைத் தாங்கள் தெரிந்து கொண்டீர்களல்லவா, முல்லா?”
“ஆனால், ஒரு வேண்டுகோள் அரசே! தாங்கள் அமீர் உல்மோமி நீன் (இஸ்லாத்தின் தலைவர்)...”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 265, புத்தகங்கள், நாம், அரசாங்கத்திற்கு, பக்கம், தாங்கள், தலைவர்கள், வால்காவிலிருந்து, மூலம், கங்கை, கிராமத்தின், மேல், அரசே, இஸ்லாத்தின், நன்மை, முல்லா, செய்வதின், அதிகமா, சிறந்த, விவசாயிகளின், வாழ்க்கையை, முடியுமானால், இப்பொழுது