வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 255
சொல்வதையெல்லாம் செய்யலாம். ஆனால், கையிலுள்ள வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்பதுதான் எனது கொள்கை.”
காதலையும், மதத்தையும் பற்றி நடந்து கொண்டிருந்த சர்ச்சை திடீரென்று அரசியலிலே திரும்பியது. ஸ்ரீ ஹர்ஷன் “மகாராஜா! உண்மையிலேயே பிருதிவிராஜனுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டீர்களா?”
“எனக்கென்ன அவசியம் வந்தது அவனுக்கு உதவி செய்ய? பெரும் புயலோடு போரை அவனே விலைக்கு வாங்கினான். அதன் பலனை அவனே அனுபவிக்கட்டும்.”
“என்னுடைய கருத்தும் இதுதான் மகாராஜா! இந்தச் சக்கரபாணி அனாவசியமாகத் தொல்லை கொடுக்கிறான்.”
“அவனுடைய வேலை வைத்தியம் செய்வது. அதில் ஒன்றும் திறமையைக் காணோம்; மூன்று முறை ஜீவரஸப் பிரயோகம் செய்தான். ஒன்றும் பயனில்லை. இப்பொழுது வந்துவிட்டான், அரசியலில் யோசனை சொல்ல.”
“இல்லை, மகராஜ்; அவன் ஒரு முட்டாள். இளவரசர் அனாவசியமாக அவனைத் தலைமேல் வைத்துக் கொண்டு ஆடுகிறார்.”
3
“சரியாகச் சொன்னீர்கள் வைத்திய ராஜரே! ஸ்ரீ ஹர்ஷன், ககடுவார் வம்சத்தின் வேருக்கு நாகப்புழுவாக வந்திருக்கிறான். தந்தை யாரை அவன் வெறும் காமக் குருடனாக ஆக்கிவிட்டான்.”
“குமார்! நான் இருபது வருட காலங்களாக கன்னிய குப்த மன்னரின்
ராஜ வைத்தியன். என்னுடைய மருந்துகளும் பலன் அளித்திருக்கின்றன.”
“மருந்துகளின் பலனை உலகம் அறியும் வைத்திய ராஜரே!”
“ஆனால், ஜீவரஸப் பிரயோகம் சம்பந்தமாக அரசர் என்மீது கோபமாக இருக்கிறார். காமவெறி பிடித்த ஓர் ஆடவனின் இளமையை எவ்வளவு நாளைக்கு அதிகப் படுத்த முடியும்? இளமையைக் காப்பாற்றுவதற்கு உணவிலும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகள் வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கிறது. நான் மல்லக்கிராமத்திலே தங்கிவிட அனுமதி கேட்கிறேன். அதற்கும் ஒத்துக் கொள்கிறாரில்லை.”
“தந்தையாரின் இந்தக் குற்றங்கள் நம்மைப் பாதிக்காது விடுமா? ககடுவார் வம்சம் இப்பொழுது உங்களையே நம்பியிருக்கிறது வைத்திய ராஜ!”
“என்னை இல்லை; குமார ஹரிசந்திரனை. ககடுவார் வம்சத்தில் ஜெயசந்திரனின் ஸ்தானத்தில் ஹரிசந்திரன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றா
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 255, புத்தகங்கள், எவ்வளவு, பக்கம், வைத்திய, ககடுவார், வால்காவிலிருந்து, கங்கை, பிரயோகம், ஜீவரஸப், இப்பொழுது, அவன், ஒன்றும், ராஜரே, நான், செய்ய, செய்யலாம், வேண்டுமானாலும், சிறந்த, ஸ்ரீ, ஹர்ஷன், அவனே, உதவி, பலனை