வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 241
“ஆச்சாரியரே! இந்த இருட் குகையிலிருந்து வெளிப்படுவதற்கு ஒன்றும் வழி இல்லையா?”
“வழியா? ஒவ்வொரு நோய்க்கும் மருந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் விடுதலையடைவதற்கு ஏதாவது வழி ஏற்படவே செய்யும். ஆனால், அந்த இருட் பிழம்பிலிருந்து விடுதலை அடையும் வழி இந்தப் பெரிய அக்கினியாற்றிற்குப் பாலம் ஒரு தலைமுறையிலே உண்டாக்கிவிட
முடியாது. ஏனெனில், இதைச் செய்யக்கூடிய கைகள் மிகக் குறைவாய் இருக்கின்றன. அறியாமை இருளின் பலமோ, மிக அதிகமாயிருக்கிறது.”
“அப்படியானால் நம்பிக்கை இழந்து உட்கார்ந்துவிட வேண்டியது தானா?”
“ஜனங்களை ஏமாற்றுவதைவிட உட்கார்ந்துவிடுவதே நல்லது. யார் ஜனங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமோ, அவர்களே ஜனங்களை ஏமாற்றுகிறார்கள், இந்த நிலைமை நமது நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் இருக்கிறதென்று தோன்றுகிறது. சிங்களம், சுமத்ரா, ஜாவா, கம்போஜம், சம்மா, சீனா, பாரசீகம் ஆகிய இந்த நாடுகள் எதிலிருந்து மாணவர்கள் நமது நாளந்தாவிற்கு வரவில்லை? அவர்களிடம் தெரிந்து கொண்டதிலிருந்து உலகம் இருட்டடிக்கப்பட்டு விட்டது என்றே தெரிய வருகிறது.”
தர்மகீர்த்தி, ஆயிரக்கணக்கான வருடங்களுக்குச் சுடர் விட்டுக் கொண்டிருக்கக் கூடிய சொல் நெருப்புக் கனலை வீசி இந்த இருட்டைப் போக்க முயற்சி செய்தார். ஆனால் அவைகளால் தற்காலத்தில் பலன் ஒன்றும் ஏற்பட்ட தாய்த் தெரியவில்லை. நான் எரிந்து கொண்டிருக்கும் தீவட்டிகளை வீசவேண்டுமென்று ஏற்பாடு செய்தேன். அதன் பலனாகத் தான் இந்தத் துர்முகன் என்ற பெயரைப் பெற்றேன். இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விட விரும்புகிறேன். நான் எனது நாக்கை உபயோகிப்பதிலும், அரசாங்கத்தின் மீது நேரான அடி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லாவிடில், இந்தத் துர்முகனுடைய வாய் உடனே அடைக்கப்பட்டுப் போய்விடும். சில சமயங்களில் மற்றவர்கள் கவனிக்காத பொழுது என் நாக்கு
நீண்ட தூரம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 241, புத்தகங்கள், நான், கங்கை, பக்கம், வால்காவிலிருந்து, இருட், ஒன்றும், நமது, இந்தத், முடியாது, ஒவ்வொரு, வரும், பெரிய, சிறந்த, இங்கு, மாணவர்கள், இந்தப், அறிவால்