வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 24
பனிக் காலத்தில் உறைந்திருந்து, இப்போது உருகிப் பெருக்கெடுத்தோடும் நதிகளைப் போல மனிதர்களின் பரிவாரங்களும், தங்கள் ஆயுதங்கள், குழந்தைகள், தோல் முதலிய தட்டுமுட்டுச் சாமான்கள் இவைகளைத் தூக்கிக் கொண்டும் நெருப்பைக் காப்பாற்றிக் கொண்டும், திறந்த வெளிகளில் வசிக்க ஆரம்பித்தனர். இவர்களுடைய நாய்கள் கடித்துக் கொண்டு வரும் ஆடு, ஓநாய் இவைகளைக் கொண்டோ அல்லது இவர்களே ஆயுதங்களின் உதவியால் பிராணிகளைக் கொன்றோ தங்கள் ஆகாரத்தைத் தேடிக் கொள்கின்றனர். நதிகளிலும் மீன்கள் ஏராளம். வால்கா நதிப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மீன் பிடிப்பதிலும் சமர்த்தர்கள்.
இப்பொழுதும் இரவில் குளிர் இருக்கிறது. ஆனால் பகல்
உஷ்ணமாயிருக்கும். ஏனைய குடும்பங்களைப் போல் நிஷாவின் பரிவாரமும் வால்கா நதிப் பிரதேசத்தைத் தங்கள் வாசஸ்தலமாக்கிக் கொண்டார்கள். நிஷாவைப் போலவே மற்ற குடும்பங்களுக்கும் தாய்தான் தலைவி; தகப்பன் அல்ல. மேலும் அங்கு யாருக்கு யார் தகப்பன் என்று கூறுவது முடியாத காரியம். நிஷாவுக்கு எட்டுப் பெண் மக்களும் ஆறு ஆண் மக்களும் பிறந்தனர். அவர்களில் நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் இப்பொழுதும்-நிஷாவின் ஐம்பத்து ஐந்து வயதிலும் உயிருடன் இருக்கிறார்கள். இந்த ஏழு பேரும் நிஷாவின் புத்திரபுத்திரிகள் என்பதற்கு, அவர்களைப் பிரசவித்த நிஷாவே சாட்சியாயிருக்கிறாள். ஆனால் இந்த ஏழு பேருக்கும் தகப்பன் யார் என்று சொல்வது முடியாது. ஏனெனில் நிஷாவின் தாய்-நாம் முன்னே சந்தித்த கிழவி-குடும்பத்தின் தாயாய்-தலைவியாய் இருந்து பரிவாரத்தை நடத்தி வரும்பொழுது, மங்கைப் பருவமாயிருந்த நிஷாவுக்கு அவளுடைய சகோதரர்களும் புத்திரர்களும் நாயகர்களாயிருந்தனர். பல தடவை, இவளோடு சேர்ந்து ஆடியும், பாடியும் இவளுடைய காதலுக்கு உரியவர்களாவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையைத் தடுப்பதற்குச் சக்தியற்றவர்களாகி விட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச் சொல்ல முடியும்? நிஷாவின் குடும்பத்தில், இப்பொழுது அவளேதான் குடும்பத்தின் தாய்-
தலைவியாயிருக்கிறாள் ஆனால், இந்தத் தலைமை இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். ஒன்றிரண்டு வருடங்களில் இவளுடைய பெண் மக்களில் பராக்கிரமசாலியான லேக்கா பரிவாரத்தின் தலைவியாகி விடுவாள். அப்பொழுது சகோதரிகளுக்குள் அவசியம் சண்டை உண்டாகும். இதே போல் லேக்காவின் சகோதரிகளும், ஒன்று அல்லது இரண்டு பரிவாரங்களை ஸ்தாபிப்பதில் வெற்றி பெறவும் முடியும். ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தின் சில நபர்கள் துஷ்ட மிருகங்களால் தாக்கப்பட்டும், வால்கா நதியின் வெள்ளத்தில் இழுக்கப்பட்டும் குறையும் போது, அந்தக் குடும்பத்தின் எண்ணிக்கை குறையாமல் காக்க வேண்டியது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 24, குடும்பத்தின், புத்தகங்கள், நிஷாவின், தகப்பன், கங்கை, வால்காவிலிருந்து, அவளுடைய, வால்கா, அல்லது, தங்கள், யார், பக்கம், தாய், வெற்றி, முடியும், இப்பொழுது, மக்களும், இவளுடைய, யாருக்கு, நதிப், கொண்டும், முதலிய, இப்பொழுதும், போல், நிஷாவுக்கு, சிறந்த, பெண்