வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 23
இங்கு நடைபெறுவது ‘தாயின் ராஜ்யம்’. ஆனால் அநியாயமோ உயர்வு தாழ்வோ இல்லாத ராஜ்யம். கிழவியையும் ஆடவர்களில் பெரியவனையும் தவிர்த்து, மற்ற எல்லோரும் அந்தத் தாயின் குழந்தைகள். தாயும் அந்தப் பெரியவனும், கிழவியின் மகனும், மகளும். ஆகையால் அங்கே ‘என்னுடையது’ என்ற பேதமே கிடையாது. ஏனெனில் அந்தப் பேதம்-உன்னுடையது, என்னுடையது என்ற பேதம் பிறப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம்; இங்கே-இந்த ராஜ்யத்தில், எல்லா ஆடவர் மீதும் தாய்க்குத்தான் முதலாவது அதிகாரம். அதுவும் ஒரே மாதிரியான - சமமான அதிகாரம்; வித்தியாசம் கிடையாது.
மகனும், புருஷனுமாயிருந்த இருபத்து நான்கு வயதுடைய ஆடவன்
இறந்துவிட்டதால், அவளுக்கு, தாய்க்குத் துக்கம் இல்லாமல் இல்லை. இருந்தாலும், அந்தக் காலத்து மனித வாழ்க்கை முக்கியமாக நிகழ்காலத்திலேயே கவனம் செலுத்துவதாய் இருந்தது. தாய்க்கு இரண்டு நாயகர்கள் இருந்தனர். மூன்றாவது புருஷன்-பதினான்கு வயதுப் பையன் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் அவளுடைய ராஜ்யத்தில் எத்தனை குழந்தைகள் அவளுடைய கணவன் ஸ்தானத்திற்கு வருவார்களோ யார் கண்டார்கள்? இருபத்து ஆறு வயதுடைய ஆடவனைத் தாய் நேசித்தாள். ஆகையால் பாக்கி மூன்று பெண்களின் கணவன் ஸ்தானத்துக்கு, ஐம்பது வயதுக் கிழவன்தான் மிஞ்சியிருக்கிறான்.
பனிக்காலம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. இக்காலத்தில், கிழவியின் உடலை விட்டு அவள் ஆவியும் விடை பெற்றுக் கொண்டது. குழந்தைகளில் மூவரை ஓநாய் விழுங்கி விட்டது. ஆடவர்களில் பெரியவன் பனி உருகி நதியில் போய்விட்டான். இந்த விதமாக தாயின் பரிவாரம் பதினான்கிலிருந்து ஒன்பதுக்குச் சுருங்கி விட்டது.
3
வசந்த காலம். கடந்த ஆறு மாதங்களாக மொட்டையாய் நின்ற மரக் கிளைகளில் சிறிய இலைகள் துளிர் விடுகின்றன. பனி உருகி, பசும்புல்லால் போர்த்தியது போன்ற காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பூமி. திசை முழுதும் புத்துயிரும் புதிய களையும் பெற்று விளங்கின. காற்றிலே நல்ல வாசனை
எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அநேக விதப் பட்சிகள் மரக்கிளைகளில் அமர்ந்து இனிய சப்தமிடுகின்றன. எங்கும் வண்டுகளின் ரீங்காரம்; பனி உருகிவரும் நீரோட்டக் கரைகளில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் புழுக்களைத் தின்பதில் கவனத்தைச் செலுத்துகின்றன. ஆணும், பெண்ணுமான ஜோடி அன்னங்கள் காதலில் திளைத்திருக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 23, புத்தகங்கள், சிலர், விட்டது, பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, ராஜ்யத்தில், இன்னும், பேதம், அதிகாரம், கிடையாது, கணவன், உருகி, எங்கும், ஆகையால், அவளுடைய, வயதுடைய, இருபத்து, குழந்தைகள், கட்டையைத், தட்டித், கட்டையோடு, ஆரம்பித்து, சிறந்த, தாளம், போட்டனர், கிழவியின், அந்தப், தாயின், ஆடவர்களில், மகனும்