வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 236
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்த அரசர்களில் யாருக்காவது, இந்த நாடகங்களை எழுதிய மகாகவி, இதே பாணபட்டன்தான் என்று தெரிந்துவிட்டால், என்னுடைய சுற்றுப் பிரயாணமும், இன்ப வாழ்வும் என்ன கதியாகும்? நான் எந்த அரசனிடம் ஆஸ்தான கவியாக இருக்க விரும்பவில்லை. என் தந்தையின் சொத்து போதுமான அளவு இருந்தது. ஹர்ஷனுடைய ராஜ்யத்தைச் சேர்ந்த பிரஜையாக இல்லாவிடில், அவனுடைய ஆஸ்தான கவியாகவும் ஆகியிருக்க மாட்டேன்.
ஹர்ஷன் சொல்வது போல, நான் ஒரு காமலோலன் என்று நீங்கள் கருதக்கூடும். என்னுடைய நாடக சபையிலே வேசையர்கள் மிகக் குறைவு. நாட்டியம், சங்கீதம், நடிப்பு முதலிய கலைகளைக் கருதியே ஒரு சில வேசையர்களைச் சேர்த்துக் கொண்டேன். எங்கள் நாடக வானத்திற்கு, நட்சத்திரங்கள் வேறோரு வழியிலிருந்து வந்தன. எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியாது. ஆனால், இப்பொழுது தேசத்திலுள்ள அழகிய யுவதிகள் யாவரும் - அவள் க்ஷத்திரியப் பெண்ணாக இருந்தாலும் சரி, பிராமணப் பெண்ணாக இருந்தாலும் சரி - அரசர்களுடையவும் குறுநில மன்னர்களுடைய சொத்தாகவே கருதப்படுகிறார்கள். என்னுடைய அத்தை ஒருத்தியை மகத நாட்டின் மௌக்கரி குல குறுநில மன்னன் ஒருவன், பலவந்தமாகக் கொண்டுபோய் வைத்துக் கொண்டான். அவன் இறந்த பொழுது அவளும் கிழவியாகிவிடவே எங்கள் வீட்டில் வந்து வசித்து வந்தாள். என்மீது அவளுக்கு அதிக அன்பு. நானும் அவளுடைய அந்தக் குறுநில மன்னனின் தொடர்பைப் பற்றிப் பொருட்படுத்துவதே இல்லை. பாவம், அதில் அவளுடைய
குற்றமென்ன? தேசத்திலே அழகிய யுவதிகளுக்குக் குறைவா? ஆனால், எல்லா அழகிகளுக்கும் முதலாவது உரிமையாளர் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசர்களும், குறுநில மன்னர்களுமே என்று ஏற்பட்டால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகப்படுமென்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அரசர்களும் குறுநில மன்னர்களும், இந்த அழகிகளை அடைவதற்கு விதவிதமான வழிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். கல்யாணமான பெண், கணவன் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னால், முதல் இரவை அரசன் அல்லது குறுநில மன்னனோடு கழிக்க வேண்டுமென்பது ஒரு வழி. இதை ஜனங்கள் மதக் கடமையாகக் கருதிச் செய்தார்கள். தங்கள் மகள், மருமகள், சகோதரிகளைப் பல்லக்குகளிலே வைத்து அந்தப் புரங்களுக்கு அனுப்பினார்கள். ஆனால், அப்படி பல்லக்குகளிலே அனுப்பாவிட்டால், அரசனுடைய கோபம் முழுமைக்கும் ஆளாக வேண்டும் அல்லவா? அவ்விதம் அனுப்பப்படும் பெண்களில் தனக்குப் பிடித்தமானவர்களை, அரசன் அந்தப்புரத்திலேயே நிறுத்திக் கொண்டு விடுவான். ராணி என்ற ஹோதாவில் அல்ல. கேவலம் வேலைக்காரி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 236, குறுநில, புத்தகங்கள், நான், நாடக, கங்கை, பக்கம், என்னுடைய, வால்காவிலிருந்து, அழகிய, ஆஸ்தான, பெண்ணாக, எங்கள், அரசர்களும், பல்லக்குகளிலே, அரசன், என்ன, அவளுடைய, இருந்தாலும், நாடகங்களை, ஜனங்கள், இருக்க, அரசர்கள், சிறந்த, மகாகவி, கொண்டு, யோசித்துப், நாட்டின், ஹர்ஷனுடைய, பாருங்கள்