வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 22
நித்திரையில் ஆழ்ந்திருந்த குழந்தைகளும் பெண்களும் விழித்து விட்டனர். எவ்வளவு அயர்ந்த தூக்கத்திலிருந்தாலும் சிறு சப்தத்தையும் கூடக் கேட்டு எழுந்துவிடுவது இவர்களின் இளமையிலிருந்து வரும் பழக்கம்.
வெகு கவனத்தோடும் பிரயாசையோடும், தாய் இது வரை குடும்ப பாரத்தை ஏற்று நடத்தி வந்தாள். மான், முயல், மாடு, ஓநாய், ஆடு, குதிரை முதலிய மிருகங்கள் இங்கு பனி ஆரம்பமாவதற்கு முன்பே, தெற்கே உஷ்ணப் பிரதேசத்தை நாடிச் சென்று விடுவது வழக்கம். இவர்களும், அதே போல் போயிருக்க வேண்டியவர்கள் தான்; ஆனால் அந்தச் சமயத்தில் பதினாறு
வயதுள்ள மங்கை நோய்வாய்ப் பட்டு இருந்தாள். அந்தக் காலத்து மனித தர்மப்படி, ‘ஒருவருக்காக மற்றவர்களையும் ஆபத்துக்கு உட்படுத்தக் கூடாது’ என்பதுவே குடும்பத்தை நடத்தும் பெரியவளின் - தாயின் கடமையாயிருந்தது. ஆனால் அன்று அவளுடைய இதய பலவீனம், இன்று ஒன்றுக்கு இரண்டு மனித உருவங்களைப் பறி கொடுக்கும்படி செய்துவிட்டது. இந்த ஆரண்யத்தை நோக்கித் திரும்பவும் மிருகங்கள் வந்து சேர்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். இந்த இரண்டு மாதங்களுக்குள் இன்னும் எத்தனை ஜீவன்களை இழக்க வேண்டியிருக்குமோ, யார் கண்டார்கள்? மூன்று கரடி, ஓர் ஓநாய் இந்த நான்குமா இந்தப் பரிவாரம் பூராவுக்கும் இரண்டு மாதங்களுக்குக் காணும்?
குழந்தைகளுக்குப் பரம சந்தோஷம். ஏனென்றால் அவர்களுடைய வயிறு முதுகெலும்போடு ஒட்டிக்கிடந்தது. தாய் முதலில் ஓநாயினுடைய ஈரலை வெட்டி வெட்டிக் குழந்தைகளுக்குக் கொடுத்தாள். அவைகள் அவசர அவசரமாக அவற்றை மென்று விழுங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு தோலுக்குச் சேதமில்லாமல் அதை உரித்தாள். ஏனெனில், தோல் அவர்களுக்கு ரொம்ப உபயோகமுள்ள வஸ்து. மாமிசத்தை அறுத்து அறுத்து நெருப்பில் வாட்டினாள். பசியோடு காத்திருந்த கூட்டம் சுட்டும் சுடாமலும் எடுத்துக் கவ்வுகின்றன. சிலர் கழுத்துப் பாகத்தின் மெல்லிய மாமிசத்தை அறுத்துக் கொடுக்கும்படி தாயைக் கெஞ்சிக் கேட்கின்றனர். அப்பொழுது, தாய் ‘இன்று வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; நாளையிலிருந்து இவ்வளவு கிடையாது’ என்று சொல்லும்போது எவ்வளவு பொறுப்புடன் சொல்லுகிறாள்.
குகைக்கு உள்ளே சென்ற தாய் ஒரு தோல் பாத்திரத்தைக் கொண்டு வந்து பரிவாரத்தின் முன்னே வைத்து “இதில் மது இருக்கிறது; யாவரும் குடியுங்கள்; ஆடுங்கள்; பாடுங்கள்; சந்தோஷம் கொண்டாடுங்கள்” என்று உத்தரவிட்டாள்.
சிறிய குழந்தைகளுக்கு உறிஞ்சிக் உறிஞ்சிக் குடிக்கத் தான் கிடைத்தது. பெரியவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் கிடைத்தது. சொல்லவா
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 22, தாய், புத்தகங்கள், இரண்டு, பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, சந்தோஷம், வயிறு, இன்னும், அறுத்து, கிடைத்தது, உறிஞ்சிக், வந்து, மாமிசத்தை, தோல், தான், வைத்து, தங்கள், சிறந்த, யாவரும், எவ்வளவு, மனித, மிருகங்கள், ஓநாய், கொடுக்கும்படி