வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 229
“சுபர்ணா! ஜனங்களின் பலத்தைக் கொண்டுதான் நாம் ஏதாவது செய்ய முடியும். ஆனால், ஜனங்கள் ஏமாற்றத்திலே ஆழ்ந்துகிடக்கிறார்கள். புத்தர் பெருமான், ஜாதி நிற பேதங்களை ஒழித்துவிடப் பெரும் பிரயாசைப் பட்டார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். வெளி நாட்டார்களான கிரேக்கர்கள், சகரர்கள், கூர்ஷரர்கள், அபீர்கள் இவர்களையெல்லாம் மிலேச்சன் என்றுசொல்லி பிராமணர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால் புத்தசங்கம் அவர்களை மனிதத் தன்மையோடு சம உரிமை கொடுத்து வரவேற்றது. கொஞ்ச நாளிலே, பாரத தேசத்தில் இந்த வேற்றுமை உணர்ச்சியே அற்றுப் போய்விடும் என்று தோன்றிற்று. ஆனால், துரதிருஷ்டவசமாகப் பிராமணர்களுக்கு இந்தக் குப்த சாம்ராஜ்யம் கிடைத்திருக்கிறது. முதலில் குப்தர்கள் இங்கு வந்தபொழுது, அவர்களையும் மிலேச்சர்கள் என்று கூறி பிராமணர்கள் ஒதுக்கித் தள்ளினார்கள். ஆனால் இந்தக் காளிதாஸன், இவர்களின் புகழைப் பெருக்குவதற்காக ‘ரகு வம்சத்தையும், ‘குமார சம்பவத்’ தையும் எழுதி வைத்தான். குப்தர்கள், தங்கள் வம்சத்தின் ஆட்சி நிரந்தரமாக இந்த நாட்டிலே நிலைத்துவிடச் செய்ய வேண்டுமென்று பயித்தியம் கொண்டலைகிறார்கள். பிராமணர்களும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். நமது பிக்ஷு சிரேஷ்டர் வசுபந்து, இந்த மாதிரி நம்பிக்கைகளை ஊட்டமாட்டார். அவர், ஜன ஆட்சிகள் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட பிக்ஷு சங்கத்தின் உண்மையான அங்கத்தினர் பிராமணர்கள், பௌத்தர்களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருதுகிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பௌத்தர்கள், பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்திற்காகவே, பசு மாமிசம் தடை செய்யப்பட்டதென்றும், பசுவையும் பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும், பிராமணர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். பௌத்தர்கள் ஜாதி நிற வேற்றுமைகளை ஒழிக்க விரும்புகிறார்கள். பிராமணர்களோ, ஜாதி உணர்ச்சியே இல்லாதிருந்த கிரேக்கர்கள், சகரர்களையும்கூட உயர்ந்த ஜாதியில் சேர்ப்பதாக ஆசை காட்டு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 229, புத்தகங்கள், அவர், பிராமணர்கள், ஜாதி, பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, இந்தக், பௌத்தர்கள், மாமிசம், உணர்ச்சியே, பிக்ஷு, குப்தர்கள், செய்ய, சிறந்த, கண்டு, நான், அவருடைய, கிரேக்கர்கள்